அஷ்வினும் இல்லை ஜடேஜாவும் இல்லை. இவர் தான் எங்களுக்கு அச்சுறத்தலாக இருப்பார் – தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேச்சு.

தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1

By ·

தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1 என்று தொடரை கைப்பற்றி இருந்தந்து. அதன் பின் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

முதல் ஆட்டம் செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை, இன்று தொடங்குகிறது. அதில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இண்டிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர். கோலி தென்னாப்பிரிக்காவில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 51.35 சராசரியில் 719 ரன்கள் குவித்துள்ளார். 2018 செஞ்சூரியன் டெஸ்டில் அவர் 217 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தது, தென்னாப்பிரிக்கா மைதானத்தில் அவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறனர்.

இது குறித்து தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பவுமாகூறுகையில், இந்திய பேட்டிங் வரிசையிலிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால் அது விராட் கோலி தான் இருப்பார். விராட் கோலி போன்ற ஒரு வீரரை உங்களால் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். அவர் இங்கு தென்னாப்பிரிக்காவில் பல முறை விளையாடியுள்ளார், எனவே அவர் நிலைமைகளை புரிந்துகொள்கிறார் என்று நீங்கள் கூறுவீர்கள்.

35 வயதான விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியில் இந்தியாவின் முக்கிய வீரராக இருப்பார். பவுமாவைத் தவிர, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுத் தாக்குதலை வழிநடத்தும் ககிசோ ரபாடாவும், கோலியைப் பாராட்டி, “இது எப்போதும் சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறது. விராட் ஒரு சிறந்த வீரர்; அவர் எங்களுக்கு எதிராக சில வெற்றிகளைப் பெற்றுள்ளார் என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை