கில், ரிஷப் பன்ட் எல்லாம் கிடையாது இவர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார். அம்பதி ராயுடு கணிப்பு.

இந்திய அணியானது அடுத்த வருடம் நடக்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிக்கு தயாராகி வருகிறது. அதற்கு இந்திய வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட T20 போட்டியானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை இறுதி போட்

By ·

இந்திய அணியானது அடுத்த வருடம் நடக்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிக்கு தயாராகி வருகிறது. அதற்கு இந்திய வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட T20 போட்டியானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்று தற்போது இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

அதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணியும் கடைசியாக நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதற்கு கேப்டனாக சூரிய குமார் யாதவ் இருந்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதாலே சூரியகுமார் யாதவ் அதற்கு இந்த போட்டியில் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மாவிற்கு பின்பு இந்திய அணியை யார் வழி நடத்துவார் என்று கேள்வியும் தற்போது எழுந்து வந்துள்ளது.

அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் என இருவரும் இருக்கின்றார்கள். ஹர்திக் பாண்டியா குறித்து உடல் நலங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்து வந்து உள்ளது. கே.எல் ராகுல் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பிசிசிஐ க்கும் பெரிய கேள்வியாக இருக்கின்றது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யாரை நிர்ணயிப்பது என்பது குறித்து. கேப்டன் குறித்து எந்த ஒரு வீரரும் ஆர்வம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்களும் வெளியாகி இருக்கின்றது.

ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு பிறகு சுப்மான் கில் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய வீரர்களாக கேப்டன் அணியை வழிநடத்த தகுதியானவர்களாக இருப்பார் என்றும் தெரிகிறது இவர்கள் மூவருமே ஐபிஎல் போட்டியில் ஒரு கேப்டனாக அணியை நடத்தி  வருகின்றனர் என்பது சிறப்பு மிக்கது. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் சென்னை அணி முன்னாள் வீரருமான அம்பதி ராயுடு கூறுகையில்,

இந்திய அணியில் ருதுராஜ் மிகவும் குறைவாகவே பயன்படுத்திருக்கின்றார்கள், அவர் மிகவும் திறமையான வீரர் தான் அவருக்கு அபார திறமை இருப்பதாக நான் நினைக்கின்றேன். அவரை இந்திய அணி அனைத்து வடிவங்களான அனைத்து போட்டிகளிலும் அவரை பயன்படுத்த வேண்டும் அவருக்கு விளையாட வாய்ப்பு தர வேண்டும். அவருடைய சிறப்பான விஷயம் என்னவென்று பார்த்தால் அவரின் திறமைதான். அவர் பந்து டைமிங் கரெக்டாக அடிப்பார்.

அவருடைய ஷாட்டுக்கள் மற்றும் அவருடைய டைமிங் எல்லாமே மிகவும் மகத்துவமானது. அவர் மிகவும் அழகும் தரம் வாய்ந்த கிரிக்கெட்டராகவும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் எப்பொழுது மிகவும் அமைதியாக இருப்பார் ஆனால் செய்ய வேண்டிய நேரத்தில் அதை கரெக்டாக செய்து முடிப்பார். அவர் இந்த விஷயத்தில் தோணி போன்று இருப்பார் அவருக்கும் தோனிக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கின்றது . தோனிக்கு பிறகு சென்னை அணியை அவற்றின் வழி நடத்துவார் என்று நான் தற்பொழுது நினைக்கின்றேன். அதன் பின் அவர் இந்திய அணியும் வழிநடத்தலாம். ஏனென்றால் அவர் ஆசிய போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கின்றார் என்றும் அம்பத்தி ராயுடு கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை