6 சிக்ஸர்கள் 8 போர்கள் அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன் – ஐபிஎல்லில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஐபிஎல் 2023 தொடரின் 65 போட்டியானது தற்போது ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போன

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 65 போட்டியானது தற்போது ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.

ஆனால் அதற்கு பிறகு அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 15(12) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தார் சிக்ஸர்களும் போர்களுமாக இவர் அடிக்க ஹைதராபத்திற்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் மறுபுறம் பொறுமையாக ஆடிய ஹைதராபாத் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 18(20) ரன்களில் ஆட்டமிழக்க கிளாசன் மட்டும் சிறப்ப ஆடி 24 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் பொறுமையாக ஆட கிளசன் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத்.

மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன். ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் அணிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து விட்டார். இந்நிலையில் அவர் சதம் அடித்த வீடியோ தான் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கிளாசன் ஆட்டமிழந்த பிறகு கடைசி ஓவரில் பெரிதாக ரன்கள் எதுவும் செல்லவில்லை. இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய ஆர்சிபி அணி சிறப்பான பேட்டிங்கை காட்டி வரும் ஹைதாராபாத் அணி இந்த செய்தியை எழுதும் வரையில் விக்கெட்டுகளை எதுவும் இழக்காமல் 6.1 ஓவர்களில் 60 ரன்களை எடுத்துள்ளது பெங்களூரு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை