நான் மார்க் வுட்டிடம் மன்னிப்பு கேட்டேன் – மைதானத்தில் நடந்தது இதுதானா? கிளாசன் பேச்சு.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இன்றைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும்ன
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இன்றைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும்ன்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் செய்ய விரும்பியது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் கிளாசென் 109 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும், ஜான்சன் 75 ரன்களையும் குவித்தனர்.
400 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 1௦௦ ரன்கள் இருந்த நிலையிலே 8 விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சில காரமான சம்பவங்களும் நடைபெற்றது.
அதாவது இந்த போட்டியின் போது ஹென்ரிச் கிளாசென் 67 பந்துகளில் அதிரடியாக விளையாடி 109ரன்களை குவித்தார். இதன் போது அவர் சதம் அடிப்பதற்கு முன்பாக மார்க் வுட் பந்தில் கிளாசான் இரண்டு முறை காலில் அடி வாங்கினார். ஆனால் அதே ஓவரில் கிளாசான் சதம் அடித்த நிலையில் மார்க் வுட்டின் முகத்தை பார்த்து கத்தி தன்னுடைய சதத்தை கொண்டாடினார். இது அப்போது சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தான் கிளாசன் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “முதல் பகுதி முடிந்த பிறகு நான் உடனடியாகச் சென்று அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் என்னை இரண்டு முறை காலில் அடித்தார், அது கொஞ்சம் வலிக்கிறது. அவருக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால் நான் அப்போது அப்படி நடந்து கொண்டது உணர்ச்சி வசப்பட்டுதான். அதனை சில நேரங்களில் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். விளையாட்டுக்குப் பிறகு நான் அவரிடம் பேசினேன். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் என்றார் கிளாசான்.
இந்நிலையில் இது குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில் “100 அடித்ததற்கு அவர் உணர்ச்சிவசப்பட்டதாக நான் நினைக்கிறேன். அவர் மார்க் வுட்டின் முகத்திற்கு நேராக அதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன், மேலும் சில நொடிகளுக்குப் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டார். அதனால் அங்கு மோசமான உணர்வுகள் எதுவும் இல்லை என்று கூறினார் பட்லர்.