ரசிகர்கள் செய்தது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது – ஹென்ரிச் கிளாசென்.

ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்றாவது நடுவர் தவறான முடிவை எடுத்தாக ​​மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சலசலப்பை ஏற்படுத்தியத

By ·

ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்றாவது நடுவர் தவறான முடிவை எடுத்தாக ​​மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சலசலப்பை ஏற்படுத்தியது தற்போது ஷோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் முதல் இன்னிங்கில் 19 ஓவர்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 19வது ஓவரை அவேஷ் கான் பந்துவீசினார். இந்நிலையில் அந்த ஓவரின் 3வது பந்தில் அப்துல் சமத் எதிர்கொண்ட நிலையில் அது இடுப்பிற்கு மேலே சென்றது.கள நடுவர் அதை நோ பால் என்று கூறினார். ஆனால் க்ருனால் பாண்டியா DRS எடுக்க முன்றாவது நடுவர் பேட்ஸ்மேன் சிறிது குனிந்த வாறு இருந்ததினால் நோ பால் இல்லை என்று கூறினார்.

இதனால் சன் ரைசர்ஸ் வீரர்கள் மத்தியில் அதிர்ப்த்தி ஏற்பட்டு கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஹைதராபாத் ரசிகர் ஒருவர் லக்னோ அணி வீரர்கள் அமர்ந்திருந்த பெவிலியனில் எதோ ஒன்றை கொண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் முதல் இன்னிங் முடிந்தவுடன் பேசிய ஹென்ரிச் கிளாசென் கூறுகையில் “மைத்தனத்தில் ரசிகர்கள் செய்தது ஏமாற்றத்தையும் வருத்தயும் எனக்கு அளிக்கிறது. அம்பயர்களில் நிலைப்பாடும் சரியானதாக இல்லை. விளையாட்டின் அந்த இடைவெளி எங்களுடைய ஆட்டத்தை முற்றிலும் உடைத்து விட்டதாக நான் எண்ணுகிறேன். ஆனால் தற்போது எடுத்துள்ள ரன்கள் போதுமானதாக இருக்கும் என்று கிளாசென் கூறினார்.

மேலும் பேசுகையில் விக்கெட் போட்டியின் இடையே திடீரென மாறியது. ஸ்பின் மற்றும் பௌன்ஸ் அதிகமாக இருந்தது. விக்கெட்டுக்கும் அதிகமாக திரும்பியது. அந்த மாதிரியான சூழ்நிலையில் லெந்த் பந்துகளை அடிபடத் என்பது கடினமான ஒரு காரியம். விக்கெட் மெதுவாக இருந்தாலும் மோசமான விக்கெட் கிடையாது. ஸ்பின்னர்களுக்கு தகுந்த விக்கெட்டாக இருக்கும் என்று கூறினார் ஹென்ரிச் கிளாசென்.

ஆனால் அந்த போட்டியில் முதல் இன்னிங்கில் க்ருனால் பாண்டியா வீசிய 13வது ஓவரில் SRH கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். கிளாசென் கடைசி வரையில் ஆடி 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேலும் ஹைதராபாத் 182 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்து களமிறங்கிய லக்னோ அணி சிறப்பாக விளையாடி 19.2 ஓவர்களில் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை