டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகிய நிலையில் அவருக்கு பதில் விளையாட வாய்ப்பு உள்ள வீரர்களின் பட்டியல் இதோ!
இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் எதிரான இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர
இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் எதிரான இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சிறந்த பார்மில் இருந்து வருகிறார்.
விராட் கோலி கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் அவர் இருந்தார். அதற்க்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இருந்து வந்தார். அதன் பிறகு, 35 வயதான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பை அவர் அளித்து இருந்தார். இருப்பினும் இந்திய அணியால் அந்த தொடரை வெல்ல முடியவில்லை சமன் மட்டுமே படுத்தி இருந்தது.
அதன் பின் நடைபெற்ற 3 T20 போட்டிகளில் முதல் போட்டியில் அவர் கலந்து கொள்ள வில்லை அதன் பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் தனது அதிரடி பேட்டிங்கை காட்டி இருந்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடம் பேசிய விராட், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே தனது முதன்மையான விஷயமாக இருந்தாலும், சில தனிப்பட்ட சூழ்நிலைகளால் அவர் முதல் இரண்டு போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
பிசிசிஐ அவருக்கு பதில் எந்த வீரர் விளையாடுவார் என்ற அறிவிப்பை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் சேட்டேஷ்வர் புஜாரா, ரஜத் படிதார், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் அந்த பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.புஜாரா கடைசியாக கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார், ஆனால் இந்த ஆண்டு ரஞ்சி டிராபியை ஜார்கண்ட் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதத்துடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
படிதார் மற்றும் சர்ஃபராஸ் இருவரும் சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடி ரசிகர்களை கவர்ந்தனர். படிதார் அவர்களுக்கு எதிரான சுற்றுப்பயண ஆட்டம் மற்றும் முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆகிய இரண்டிலும் சதங்களை விளாசினார், அதே நேரத்தில் சர்ஃபராஸ் சுற்றுப்பயணத்தில் 96 ரன்கள் உட்பட இரண்டு ஆட்டங்களிலும் அரைசதங்கள் அடித்தார். BCCI அறிவிப்பு வரும்வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வீரர் விளையாட வேண்டும் என்பதை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.