தோனி 15 ஆண்டுகள் விளையாடி விட்டார். இன்னமும் அவரை பற்றி நாம் ஏன் பேசுகிறோம் – தோனியின் ஓய்வு குறித்த பேசிய கபில் தேவ்.

உலக டி20 கிரிக்கெட் போட்டியில் மிக பிரமாண்டமான தொடரான ஐபிஎல் தொடரில் மறுக்க முடியாத ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது மஹேந்திர சிங் தோனி தான். கடந்த 2008ஆம் ஆடுனு தொடங்கிய ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார

By ·

உலக டி20 கிரிக்கெட் போட்டியில் மிக பிரமாண்டமான தொடரான ஐபிஎல் தொடரில் மறுக்க முடியாத ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது மஹேந்திர சிங் தோனி தான். கடந்த 2008ஆம் ஆடுனு தொடங்கிய ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார் தோனி அன்றிலிருந்து இன்று வரையில் தோனி சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

சொல்லப்போனால் ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக இன்று நடக்கும் ஐபிஎல் 2023 போட்டியில் 250வது விளையாட்டை விளையாட இருக்கும் முதல் நபர் தோனி தான். அதுமட்டுமல்லாமல் 14 போட்டிகளை விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கும் 10 முறை பைனலுக்கும் சென்றுள்ளது, மேலும் அதில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற 2 வது அணியாக சென்னை இருக்கிறது.

இந்நிலையில் தோனிக்கு வரும் ஜூலையோடு 42 வயதாகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாகவே தோனிக்கு இந்த சீசன் தான் கடைசி என்று தகவல்கள் வெளியான நிலையில் அது சம்மந்தமாக எந்த அதிகார பூர்வ தகவல்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இருந்த போதிலும் இந்த ஐபிஎல் சீசனோடு தோனி விடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வு பெருகிறாரோ? இல்லையோ? எதுவாக இருந்தாலும் அது தோனிக்கு மட்டுமே தெரியும் என்பது நிதர்சனமான உண்மை.

கபில் தேவ் :

அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானும் ஆகிய கபில் தேவ் தோனி குறித்து சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தோனியை பற்றி பேசிய அவர் தோனியின் ஓய்வு குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துளார். அவர் கூறுகையில் “தோனி15 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அப்படிருக்கையில் தோனியை பற்றி மட்டும் ஏன் பேசுகிறோம்? அவர் தனது வேலையைச் செய்துள்ளார்.

அவரிடமிருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அவர் வாழ்நாள் முழுவதும் விளையாடுவதை விரும்புகிறீர்களா? அது கடிப்பாக நடக்காது. அதற்கு பதிலாக தோனி 15 ஆண்டுகள் விளையாடியதற்கு நாம் அனைவரும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அடுத்த வருடம் ஆடுகிறாரோ? இல்லையோ? ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அவர் சிறப்பாக விளையாடினார்.

அவர் இந்த சீசனில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை எடுக்கவில்லை. ஆனால் அவர் தன்னுடைய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு கேப்டனின் முக்கியத்துவம் என்ன என்பதை அதன் முலம் காட்டுகிறார் தோனி என்று தெரிவித்தார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை