பென் ஸ்டோக்ஸ் ஓன்றும் “சூப்பர் மேன்” கிடையாது – விமர்சனங்களுக்கு மார்க் வுட் அதிரடி கருத்து

உலக கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது மேலும் அதற்கு பிறகு கடந்த வருடம் 2022ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இங்கிலாந்து அணியில் இருக்கும் பல ஆல்ரவு

By ·

உலக கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது மேலும் அதற்கு பிறகு கடந்த வருடம் 2022ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இங்கிலாந்து அணியில் இருக்கும் பல ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை தான், மேலும் இதன் மூலம் தங்களின் பேட்டிங் வரியை அதிகரித்த வைத்துள்ளது இங்கிலாந்து.

இது போன்ற சூழ்நிலையில் அதுவும் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பெண் ஸ்டோக்ஸ் சமீபத்தில் ஓய்வு அறிவித்த நிலையில் பின்னர் அதனை ரத்து செய்து மீண்டும் அணிக்கு வந்தார். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை

இதனால் என்னவோ இங்கிலாந்து அணியின் பேட்டிங் என்பது சர்வராமல் சென்றது, எள்ளலும் பந்துவீச்சும் அவ்வளவு சிறப்பாக இல்லை, இதனால் நியூசிலாந்து அணி சுலபமாக வென்றது. இதனை தொடர்ந்து தான் பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாதது குறித்து பலவிதமான விவாதங்கள் பேசப்பட்டு வருகின்றன. அதற்க்கு தான் இங்கிலந்து அணியின் நட்சத்திர வீரரான மார்க் வுட் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “நான் அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அவர் ஒன்றும் சூப்பர்மேன் இல்லை. இது ஸ்டோஸ்க் திரும்பி வருவத் மற்றும் அவர் எல்லாவற்றையும் செய்வது மட்டுமல்ல. அவர் வெளிப்படையாக எங்கள் சிறந்த வீரர்களில் ஒருவர், எங்கள் சிறந்த வீரர் இல்லை என்றாலும் எல்லா வீரர்களும் எழுந்து நிற்க வேண்டும். அவர் தற்போது கல்களை சுற்றி கட்டு இருக்கிறார்.

அவர் வலையில் இறங்கி கலை கட்டியிருக்கும் போதும் அதுநகர அனுமதிக்கிறதா என்பது பார்க்க வேண்டும். குழுவின் ஒரு சிறந்த குணாதிசயம் மீள்தன்மை மற்றும் துள்ளிக்குதித்தல், மற்றும் குழுவிற்குள் அமைதி இருக்க வேண்டும். அங்கிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் நம்புகிறேன்: அவர்கள் கெட்ட நேரங்களையும் நல்ல நேரங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள்.

நாங்கள் உலக கோப்பையை தக்கவைத்து கொள்ள விரும்புகிறோம். எங்களின் மீது மக்களுக்கு சில கேள்விகள் இருந்தால் தன்னை இதன் மூலம் தீர்த்துவைக்க முடியும். ஆனால் ஒரு குழுவாக, நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறோம், மேலும் நாம் எவ்வளவு நல்ல பக்கம் என்பதை காட்ட இது மற்றொரு வாய்ப்பு என்றார் இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை