அவரு அவுட்டானது இயந்திர கோளாறு கிடையாது. அது அவரோட கோளாறு. பெண் ஸ்டோக்ஸுக்கு பதிலளித்த பிராடு ஹாக்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்த

By ·

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணிக்கு ரன்களை குவிக்க காரணமாக இருந்தவர் ஜெய்ஸ்வால் தான். தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை அவர் குவித்து இருந்தார்.

அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் அதே நாளில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 255 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் கில் தான். 104 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்னில் விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் க்ராலி LBW மூலம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இந்த தோல்விக் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், விளையாட்டில் தொழில்நுட்பம் வெளிப்படையாக உள்ளது. அது ஒருபோதும் 100% ஆக இருக்க முடியாது என்பதற்கான காரணங்களைப் பற்றிய புரிதல் அனைவருக்கும் உள்ளது, அதனால்தான் எங்களுக்கு மூன்றாம் நடுவரின் அழைப்பு உள்ளது. அதனால்தான் அது இடத்தில் உள்ளது. எல்லோரும் சொல்வது போல் இது 100% இல்லாதபோது, ​​​​இந்த சந்தர்ப்பத்தில் தொழில்நுட்பம் தவறாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறி இருந்தார்.

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் பிராட் ஹாக்கூறுகையில், “இது குல்தீப்பின் BACK SPIN பந்து வீச்சாளர் என்று நான் உணர்ந்தேன். அது நேராக சென்றது. அது லெக் ஸ்டம்பில் அடித்ததாக உணர்ந்தேன். முன்னோக்கி ஆட வேண்டிய ஒரு பந்துக்கு அவர் மீண்டும் விளையாடியது க்ராலியின் தவறு. அது அவுட் ஆனதாக உணர்ந்தேன்.” கிராலி முதல் இன்னிங்ஸிலும் இதேபோன்ற ஷாட்டை விளையாடி அவுட் ஆனார்.

நோக்கம் சரிதான். சுழற்பந்து வீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் சரியானதே. ஆனால் சில நேரங்களில் அவர்கள் அங்கு இல்லாத ஷாட்களை விளையாடுகிறார்கள், அது இந்த இங்கிலாந்து அணியில் சில முறை நடந்துள்ளது. இங்கிலாந்து சரியான உள்நோக்கத்துடன் விளையாடியது, ஆனால் அவ்வப்போது நீங்கள் அங்கு இல்லாத ஒரு ஷாட்டை விளையாடுவீர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை