நாங்கள் அவர்களை போதுமான அளவு ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம் என்று நம்புகிறோம் – மிட்சல் ஸ்டார்க்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது நரேந்திர மோடி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகின்றது. இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக இன்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து இன்று இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகின்றது.
இன்றைய இறுதிபோட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக இந்தியாவின் விமான வீரர்கள் விமானத்தை வைத்து வானில் கண்காட்சிகளை மைதானத்திற்கு மேல் நடத்தினர். அதன் பிறகு டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சொல்லி கொள்ளும் வகையில் சிறப்பாகவே அமைந்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சுப்மான் கில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேறி இருந்தாலும் அவர் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 31 பந்துகளில் 4பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 47 ரன்கள் இருந்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்திய அணிக்கு 4 ரன்னில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதே போல் தான் சுப்மான் கில்லுக்கு அகமதாபாத் மைதானம் அவருடைய நெருக்கமான மைதானம் மற்றும் இந்திய அவர் ஐபிஎல் போட்டிகளில் அந்த மைதானத்தில் விளையாடி இருக்கின்றார் என பலர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் விராட் கோலி 54 ரன்களிலும் கே.எல் ராகுல் 66 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் யாரும் ரன்களை குவிக்க தவறிய நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வூட் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் போட்டிக்கு முன்னதாக கூறியது போல் இந்திய ரசிகர்களை அமைதியாக்கிவிட்டார். முதல் பாதி கூறித்து ஸ்டார்க் கூறுகையில்,
நீங்கள் எப்பொழுதும் ஒரு விஷயங்களைத் திட்டமிடலாம், முதலில் பந்தில் நாங்கள் பங்களித்த விதம் அருமையாக இருக்கிறது, இப்போது வெளியே (வேலையைச் செய்ய வேண்டும்) பேட் மூலம். சீம் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு முழு உதவியும் இல்லை, சில வித்தியாசமான விஷயங்களைச் செய்ய முயற்சித்தார்கள், வேகத்தை சிறிது மாற்றவும். கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் சிறந்து விளங்கினர். நாங்கள் அவர்களை போதுமான அளவு ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம் என்று நம்புகிறோம்.
நாங்கள் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு இரண்டாவது பந்து வீசினோம், அது கொஞ்சம் பனியாக இருந்தது, விக்கெட் (இன்று) கொஞ்சம் காய்ந்துவிட்டது, பனி வரும் என்று நம்புகிறேன், இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் எந்த ரிவர்ஸையும் பார்க்கவில்லை, பேட்டிங் செய்ய எளிதான விக்கெட் அல்ல, பேட் செய்ய எளிதான நேரம் கடினமான புதிய பந்திற்கு எதிராக இருக்கலாம், மேலும் ரன்களை எடுக்க வேண்டும், அது எளிதாக இருக்காது, ஆனால் நீங்கள் கேட்பது இதுதான், இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி. நீங்கள் இன்னும் என்ன கேட்க முடியும். என்றும் அவர் கூறி இருந்தார்.