ஐபிஎல் போட்டிகளில் அம்பயராக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தால் போதும் அதிக விலைக்கு எந்த வீரர் வாங்கப்படுகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டும் சப்பாத்திக்க வில்லை, அதில் நடுவராக இருக்கும் அம்பயர்களும் கோடி கணக்கில் சம்பாதிக்கின்றார். சொல்லப்போனால் ஒ
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தால் போதும் அதிக விலைக்கு எந்த வீரர் வாங்கப்படுகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டும் சப்பாத்திக்க வில்லை, அதில் நடுவராக இருக்கும் அம்பயர்களும் கோடி கணக்கில் சம்பாதிக்கின்றார். சொல்லப்போனால் ஒரு சில வீரர்கள் வெறும் 20 லட்சங்களுக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள், ஆனால் அவர்களை விட அதிகம் அவர்கள் விளையாடும் போட்டிகளுக்கு அம்பயராக இருப்பவர்கள் சம்பாதிக்கின்றனர் என்றால் அது ஆச்சரியமான ஒரு விஷயம் தான்.
ஆனால் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கும் சரியான வேலை இருக்கிறது. ஏனென்றால் போட்டி சரியாக போகிறதா? வீரரகள் யாராவது வீதியை மீதி செயல்படுகின்றனரா? நோ பால் போடுகிறார்களா? என்பதனை கவனமாக போட்டி முழுவதும் கண்காணிக்கும் வேலை நடுவர்களுக்கு இருப்பதினால் அவர்களில் எலைட் மற்றும் டெவலப்மென்ட் என இரண்டு பிரிவுகளில் அம்பயர்கள் பிரிக்கப்பட்டுள்ளார்.
எலைட் பிரிவு :
எலைட் பிரிவில் அதிகம் அனுபவம் வாய்ந்த அம்பயர்கள் மிகவும் முக்கியமான போட்டிகளுக்கு நடுவராக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு போட்டியில் நடுவராக செயல்பட்டால் ரூ 1லட்சத்து 98ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அது தவிர்த்து ரூ 12,500 ஒரு போட்டிக்கு தங்குமிடம், உணவு, பயனச் செலவு போன்றவற்றிக்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த அம்பயர்கள் ஒரு ஐபிஎல் சீசன் முழுவதும் சரியாக பணியாற்றினால் 40 லட்சத்திற்கும் மேல் இவர்களுக்கு சம்பளமாக கிடைக்கும்.
டெவலப்மென்ட் பிரிவு :
எலைட் பிரிவை போல இல்லாமல் டெவலப்மென்ட் பிரிவில் அனுபவம் குறைந்த அம்பயர்கள் இருப்பார்கள். இவர்கள் முக்கியத்தும் பெரிதும் இல்லாத போட்டிகளில் நடுவர்களாக செயல்படுவார்கள். ஐபிஎல் போட்டியில் இவர்கள் ஒரு போட்டியில் அம்பயராக இருப்பதற்கு ரூ 59 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை தவிர்த்து மற்ற செலவுக்கு எந்த பணமும் கிடைக்காது. அவர்களின் மற்ற செலவுகளை வரும் சம்பளத்தின் மூலம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இவைகளை தவிர்த்து அம்பயர்கள் மற்ற சில வழிகளிலும் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் அணியும் சட்டையில் சில நிறுவனங்களின் விளம்பரங்கள் இருப்பதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது, கடந்த ஐபிஎல் மற்றும் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் Paytm ஸ்பான்சராக இருப்பதினால் அவர்களுக்கு ரூபாய் 7லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது குறிப்பிடதக்கது. அதோடு ODI, T20, TEST போன்ற போட்டிகளுக்கும் இவர்களின் சம்பளம் மாறுபடும்.