நான் அந்த அணியை விட சிறப்பாக தான் பந்து வீசினோம். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் – வேட்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நேற்று ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும் ருதுராஜ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மறுபக்கத்தில் ஷ்ரேயஸ் ஐயர் நின்று அணிக்கு நல்ல இலக்கை அளித்தனர்.
இந்திய அணியின் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்களும் அக்சர் பட்டேல் 31 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் துவர்ஷுயிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி,நாதன் எல்லிஸ் மற்றும் டி சங்கா தலா ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர் எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 160 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது.
161 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பெண் மாசிடர்மோட்டா 53 ரன்களும் டிராவிஸ் ஹெட் 28 ரன்களும் கேப்டன் வேட் 22 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணியின் வீரர்கள் போட்டியை கடைசி வரை கொண்டு சென்று இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கூறுகையில், “நாங்கள் இந்திய அணியை ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக பந்து வீசினோம் என்று நினைத்தேன். நாங்கள் அவர்களை அந்த இலக்கிற்கு கட்டுபடுத்தி இருந்தோம். அந்த கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் பேட்டிங்கில் ஏமாற்றம் அடைந்தோம்.
டி 20 உலகக் கோப்பையை முன்னோக்கி முன்னிறுத்தி, டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோருடன் எனது ஆட்டம் சிறப்பாக இல்லை. டி20 உலகக் கோப்பையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இன்றிரவு முடிவு கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். 3-2 என்பது தொடர் இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், சில சமயங்களில் ஆட்டமிழந்தோம், ஆனால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.