இந்த ஆடுகளம் குறித்து நடுவர்கள் என்ன சொல்லபோகிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கின்றேன் – ரோஹித் ஷர்மா.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட

By ·

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக வெர்ரின்னே 15 ரன்களும் பெடிகம் 12 ரன்னிலும் ரபாடா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை சுருட்டி இருந்தனர். அதன் பின் முதல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் 7 இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இந்திய அணியின் அதிகபட்சமாக கோலி 46 ரன்களிலும் ரோஹித் 39 ரன்களும் கில் 36 ரன்களும் அடித்து இருந்தனர். அதே நாளில் 2வது இன்னிங்க்சில் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் முடிவில் 62-3 என்ற நிலையில் இருந்தது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் அதிகம் தான் அதிகம் இருந்து. இதில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மார்கரம் 106 ரன்னிலும் ஜான்சன் 11 ரன்னிலும் பெடிகம் 11 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 79 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதன் பின் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தி இருந்தது.போட்டியின் ஆடுகளம் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்து வந்துள்ளது.

பொதுவாக எப்போதும் ICC அமைப்பை BCCI கட்டுப்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்காக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மிகவும் மோசமான ஆடுகளத்தை தயார் செய்து வைத்துள்ளது இது குறித்து ஏன் இன்னும் ஐசிசி எந்த வாயிலும் திறக்கவில்லை என்றும் பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணி போன்ற நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடுகளம் குறித்து ரோஹித் ஷர்மா கூருகையில், இந்த ஆடுகளத்தின் கள நடுவர்கள் என்ன மாதிரியான ஆய்வுகளை செய்து எப்படி மதிப்பெண் தருவார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கின்றேன். இந்தியா ஆடுகள் குறித்தும் எழுதும் யாரும் குற்றச்சாட்டு முன்வைக்க விட்டால் தானும் இது குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டையும் நான் கூறப்போவதில்லை என்றும் இது எங்களின் சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாக இருக்கும். இங்கு ஒருபோதும் வெற்றி பெறவில்லை, நாங்கள் பெற்ற அனைத்து வெற்றிகளுடன் அது சரியானது என்றும் அவர் கூறியிருந்தார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை