அவரது விக்கெட்டே எனக்கு கிடைக்கும் பரிசு – நெதர்லாந்து வீரர் அதிரடி கருத்து.

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியானது பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. ஏற்கனவே விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி பபுளிப்பாட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் ஆசிய கோப்பையில் இந்தியா கோப்பையை வென்ற நிலையில் இந்த உலக கோப்பை போட்

By ·

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியானது பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. ஏற்கனவே விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி பபுளிப்பாட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் ஆசிய கோப்பையில் இந்தியா கோப்பையை வென்ற நிலையில் இந்த உலக கோப்பை போட்டியிலும் இந்திய வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் அணியின் அதற்கேற்ப பலமாக இருக்கும் காரணத்தினால் கடந்த 2011 உலக கோப்பை போட்டி போலவே இந்த முறையும் உலக கோப்பையை இந்தியா இந்த இந்திய மண்ணில் வெல்லும் என்று பலரும் தனித்திருக்கும் நேரத்தில் தான் இந்திய வம்சாவளி வீரரான நெதர்லாந்தை சேந்த ஆர்யன் தத் வரும் 12ஆம் தேதி இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ளார்.

நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆர்யன் தத் இந்த உலக கோப்பை போட்டியில் தன்னுடைய பரிசு விராட் கோலியின் விக்கெட் தான் என்று கூறியுள்ளார். அவர் இது குறித்து பேசுகையில் “அனைத்து விக்கெட்டுகளும் எனக்கு முக்கியமாகும். ஆனால் இம்முறை விராட் கோலியை அவுட்டாக்குவதை நான் விரும்புகிறேன். அது இந்த உலகக் கோப்பையில் எனக்கு கிடைக்கும் சிறந்த பரிசாகவும் நான் கருதுவேன்.

என்னுடைய பலத்தை நம்பும் நான் என்னை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை மேலும் தொடர்ச்சியாக சரியான லென்த்தை பின்பற்றி என்னுடைய வேகத்தை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேனை அவுட்டாக்குதில் மட்டுமே என்னுடைய கவனம் இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம். அவர்கள் இந்த தொடரில் மிகவும் சவாலான அணியாக இருக்கின்றனர். இருப்பினும் எங்களுடைய வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து போராடும் நாங்கள் செமி ஃபைனலுக்கு செல்வதற்கு போராட உள்ளோம் என்று கூறியுள்ளார் ஆர்யன் தத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை