“என்னால் தூங்க முடியவில்லை” குஜராத் அணியின் தோல்விக்கு பிறகு வருந்தி பேசிய மோஹித் சர்மா.

ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டாதான் காரணமாக பல மணி நேரமாக, கிட்டத்தட்ட 1 நாளே தள்ளி போனது. இதனால் 29 போட்டி நடந்த நிலையில் குஜராத் அணி 214 ரன்களை அடித்தது. ஆனால் மழையின் காரணமாக DLC முறை படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என குற

By ·

ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டாதான் காரணமாக பல மணி நேரமாக, கிட்டத்தட்ட 1 நாளே தள்ளி போனது. இதனால் 29 போட்டி நடந்த நிலையில் குஜராத் அணி 214 ரன்களை அடித்தது. ஆனால் மழையின் காரணமாக DLC முறை படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என குறைக்கப்பட்டது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் கூட்டு முயற்சியாலும், ஜடேஜாவின் அற்புதமான பேட்டிங்கினாலும் பைனலில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி ஒருபுறம் இருந்தாலும் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர் மோஹித் ஷர்மா. சொல்லப்போனால் கிரிக்கெட் போட்டிங்களில் மிகவும் கடுமையான ஒரு நேரம் என்றால் அது டெத் ஓவர்கள் தான். ஏனென்றால் அந்த ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அதிக பவுண்டரிகளை அடித்து ரன்களை எடுக்க முயற்சி செய்வார்கள். ஆனாலும் அப்படி கடினமான ஒரு காரியத்தை மோஹித் சர்மா சிறப்பாக செய்தார்.

அப்படிப்பட்ட நிலையில் தான் ஐபிஎல் சீசனில் சென்னைக்கு எதிரான இவர் கடைசி ஓவரில் வீசிய 2 பந்துகள் 10 ரன்கள் சென்றது. இதனால் சென்னை அணி வெற்றியடைந்தால் தோல்வியை சந்தித்த குஜராத் அணியில் பந்துவீச்சளர் மோஹித் ஷர்மா இது குறித்து அவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

மோஹித் சர்மா கொடுத்த பேட்டி :

அந்த பேட்டியில் “நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். வலைப்பயிற்சியில் இந்த மாதிரியான சூழ்நிலையில் பந்து வீசுவது எப்படி என்று அதிக பயிற்சி செய்தேன். இது போன்ற விஷயம் எனக்கு ஏற்கனவே நடந்திருக்கிறது. எனவே எனக்கு நல்லது என தோன்றியபடி யாகர்களை போடலாம் என்று முடிவு செய்தேன். ஹர்திக் பாண்டியா என்னிடம் வந்து அடித்தாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் யக்கர்களையே தொடர்ந்து முயற்சி செய்யப்போகிறேன் என்றேன்.

இப்போது மக்கள் அப்படியும் பேசுவார்கள் இப்படியும் பேசுவார்கள். ஆனால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். எனவே எனக்கு தோன்றிய படி யக்கர்களை வீசினேன். என்னுடைய பந்துவீச்சில் கவனமாக இருக்க முயற்சி செய்தேன். அதனைத்தான் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் செய்து வந்தேன். ஆனால் பந்து எங்கே விழக்கூடாது அங்கே சென்றது. அதனால் ஜடேஜா அதனை அடித்துவிட்டார்.

நான் என்னால் முடிந்த அளவுக்கு முயற்ச்சி செய்தேன். ஆனால் இந்த போட்டியில் நான் பந்தை வேறுமாதிரியாக வீசியிருந்தால் என்ன நடந்திருக்கும்? நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்று என்னால் இரவில் தூங்க முடியவில்லை. இது நல்ல உணர்வே கிடையாது. எதோ ஒன்றை இழந்தது போல உணர்கிறேன் என்று மிகவும் வருந்தி கூறினார் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா.

இந்த ஐபிஎல் 2023 சீசனில் 14 போட்டிங்களில் விளையாடி 263 பந்துகளை வீசி 361 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அதோடு ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருந்தது வந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை