நான் அதை எதிர்பார்த்து பந்து வீசுவதில்லை. அது போல் செய்தால் அழுத்தத்தை அதிகரிகின்றது – பும்ரா பேச்சு.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்த

By ·

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணிக்கு ரன்களை குவிக்க காரணமாக இருந்தவர் ஜெய்ஸ்வால் தான். தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை அவர் குவித்து இருந்தார்.

அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் அதே நாளில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 255 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் கில் தான். 104 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்னில் விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் பும்ரா தான். முதல் இன்னிங்க்சில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்க்சில் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார். ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்க்சில் 204 ரன்களை அடித்து இருந்தாலும் பும்ராவுக்கு தான் இந்த இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இது குறித்து பும்ரா கூறுகையில்,

நான் எண்களைப் பார்ப்பதில்லை. நீங்கள் எண்களைப் பற்றி நினைத்தால் நிறைய அழுத்தம் இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்று அதில் பங்களித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு இளைஞனாக நான் டென்னிஸ்-பால் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்ட முதல் பந்து வீச்சு அதுதான். விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அதுதான் ஒரே வழி என்று நான் உணர்ந்தேன். ஆனால் நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறோம், எனவே அவர்களை வழிநடத்துவது எனது பொறுப்பு.

ரோஹித் கேப்டன்சி நான் என்ன நினைக்கிறேன், அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்பதைப் பற்றி எல்லாம் நாங்கள் விவாதிக்கிறோம். [ஆன்டர்சனுடனான போட்டி] உண்மையில் இல்லை, மற்ற அணியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் எப்போதும் வேகப்பந்துவீச்சைப் பார்த்து ரசிக்கிறேன். யாராவது நன்றாக இருந்தால், அவர்களுக்கு நல்லது. நிலைமையைப் பாருங்கள், விக்கெட்டைப் பாருங்கள். நான் சிக்கலைத் தீர்க்கப் பார்க்கிறேன், ஒவ்வொரு விக்கெட்டும் வித்தியாசமானது, எனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறீனார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை