நான் இவரு பெயரு இருக்கும்னு எதிர்பார்க்கல. அது எனக்கே ஆச்சிரியமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா பேச்சு
நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெய
நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் சொதப்பலான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின் காயம் என்று டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவரும் ஐபிஎல் காக பயிற்சிகளை மேற்கொண்டும் ரஞ்சி ட்ரோபியில் விளையாட மூலம் இருந்து வந்தார் எனவே ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ இவர்களின் இரண்டு பெயர்களையும் நீக்கி உள்ளது மேலும் சஹல் பெயரும் அதில் இருந்து நீக்கியது பற்றி ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களையும் பகிர்ந்து உள்ளார்
“யூசி சாஹலின் பெயர் இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக இருக்கிறது. சேதேஷ்வர் புஜாரா, அக்கிங்க்யா ரஹானே மற்றும் ஷிகர் தவான் – அவர்களின் பெயர்கள் இல்லை, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த விஷயத்துக்கு தீபக் ஹூடா கூட. ஆனால் சாஹலின் பெயர் இல்லை – அது எதைக் குறிக்கிறது? அவர்கள் [பிசிசிஐ] வேறு திசையில் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இது கோட்பாட்டின் சரிபார்ப்பு. அவருக்கு நம்பிக்கையின் கதிர் இருந்திருக்கலாம், ஆனால் அது இருக்கக்கூடாது. அவரது பெயர் இல்லை” என்று சோப்ரா கருத்து தெரிவித்தார்.
“தீபக் சாஹர் கிட்டத்தட்ட அங்கே இருந்தார் என்று நினைக்கிறேன். அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவர் விளையாடவில்லை, இல்லையெனில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியிருப்பார். அவர் பெயர் இருக்கும் என்று நான் அரை நம்பிக்கையுடன் இருந்தேன், ஆனால் அவர் உலகக் கோப்பையை விளையாடி 10 டி20 ஐ விளையாடி முடித்தால், அவரது பெயர் சேர்க்கப்படும். ஆனால், இந்தக் கால கட்டத்தில் அது இல்லை. அதைத் தவிர வேறு பெரிய ஆச்சரியங்கள் எதுவும் இல்லை,” என்று சோப்ரா கருத்து தெரிவித்தார்.