ஐபிஎல் போட்டியின் போது தோனி சொன்ன விஷயத்தை நெகிழ்ந்து கூறிய சிவம் துபே – இதனால்தான் தோனி மாஸ்.

நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அற்புதமான வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறை கோப்பையை வென்றது. இந்த இறுதிப்போட்டியில் போது அணியில் உள்ள அனைவரும் கைகொடுத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஒவொவ்ரு வீரரும் களமிறங்கி ரன்களை அடித்து

By ·

நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அற்புதமான வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறை கோப்பையை வென்றது. இந்த இறுதிப்போட்டியில் போது அணியில் உள்ள அனைவரும் கைகொடுத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஒவொவ்ரு வீரரும் களமிறங்கி ரன்களை அடித்துவிட்டு ஆட்டமிழந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிவம் துபே பிரமாதமாக விளையாடினார்.

அவர் 21 பந்துகளில் அணிக்கு தேவைப்படும் 32 ரன்களை விளாசினார். மேலும் ஒருகட்டத்தில் ஒரு ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தது சென்னை அணியை மீண்டும் போட்டிக்கும் கொண்டுவந்தது என்றே கூறலாம். மேலும் இந்த சீசனில் 16 போட்டிகளில் 159.92 ஸ்டிரைக் ரேட்டில் 411 ரன்கள் எடுத்தார். 3 அரைசதங்களுடன் அவரது அதிகபட்ச ஸ்கோராக 52 ரன்கள் இருந்தது. அதோடு 35 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்திருந்தார் சிவம் துபே.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி பேசிய சிவம் துபே கூறுகையில் “சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் உண்மையில் என்னுடைய பேட்டிங்கில் நான் பெரிதாக எந்த விதமான மாற்றமும் இல்லை. கேப்டன் எம்எஸ் தோனியுத்ஸ்ய ஆதரவும் சென்னை அணி வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்த சிஎஸ்கேயின் ஆதரவும் ஆதரவும் என்னுடைய இந்த விளையாட்டிற்கு முக்கிய பங்கு வகித்தது. இந்த சீசனில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் அனைவரும் விரும்பினர்கள்.

மேலும் தோனி அவர்கள் என்னிடம் உன்னால் தனியாகவே பல போட்டிகளில் வெற்றியடைய முடியும் என்று கூறினார். அவர் அப்படி கூறியது என்னுடைய தன்னம்பிக்கையை பெருமளவு உயாத்தியது. நான் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பற்றி யோசிக்க போவதில்லை. எனவே என்னுடைய கவனம் முழுவதும் பந்துவீச்சாளர்களை எப்படி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் எதிர்கொள்வது என்ற நோக்கத்திலேயே இருக்கிறது.

மேலும் அப்படி செய்வது என்னுடைய அழுத்தத்தை குறைகிறது. எனவே நிகழ்காலத்தில் என்னால் பந்துகள் மீது மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது என்றார் துபே. மேலும் இந்திய அணி குறித்து பேசிய அவர் கூறுகையில் “மற்ற அனைத்து வீரர்களை போலவும் நானும் இந்திய அணியில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவது என்னுடைய கனவு. எனவே அதற்காக கடினமாக உழைத்து என்னை தயார்படுத்தி வருகிறேன் என்றார் சிவம் துவே.

சிவம் துபே இதுவரையில் இந்திய அணிக்காக 1 ஒருநாள் போட்டியும், 13 டி20 போட்டியலிலும் விளையாடி இருக்கிறார். ஆனால் சொல்லும் அளவிற்கு பெரிய ரன்கள் எதையும் அடிக்கவில்லை. இருந்த போதிலும் தான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார் சிவம் துபே.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை