இரண்டாவது இன்னிங்க்ஸில் எனக்கு அதிர்ஷடம் கிடைத்தது அது எனது பெரிதும் உதவியது – ஒல்லி போப்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்க்சில் இ

By ·

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள உப்பிலி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி அடித்திருந்தது. அதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களும் டக்கட் 35 ரன்கள் அடித்து இருந்தனர்.

இந்தியா அணியின் சார்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா மூன்று விக்கட்டுக்களையும் பும்ரா 2 மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். அதன்பின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 436 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணி அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும் கேஎல் ராகுல் 86 ரண்களும் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர். 190 ரன்களை முன்னிலையில் இந்திய அணி இன்னிங்க்சை நிறைவு செய்து இருந்தது.

அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் தங்களது பேஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் அவர்கள் நிரூபித்தனர். நாளில் அதாவது இன்று அவர்கள் 420 ரன்கள் குவித்து விருந்தினர். அதில் அதிகபட்சமாக போப் 196 ரன்கள் டக்கெட் 47 ரன்களும் டாம் 34 ரன்கள் அடித்து தங்களது வழக்கம் போல் கூறிவரும் போஸ்பால் ஆட்டத்தை இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தனர். இந்திய அணியின் சார்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும்,

அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா இரண்டு விக்கெட்களையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வைத்து இருந்தனர். எனவே இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்து இருந்தது இங்கிலாந்து அணி. தற்போது இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜெயஸ்வால்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருந்தாலும் அதன் பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. முதலில் ஜெய்ஸ்வால் 15 ரன்களுக்கும் கில் 0 ரன்னிலும் ரோஹித் 39 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர் அதன் பின் அதிகபட்சமாக அஷ்வின் 28 ரன்களும் பரத் 28 ரன்களும் அடித்து இருந்தனர்.

அதன்பின் வந்த அனைத்து வீரர்களும் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறி நிலையில் அஸ்வின் மற்றும் பரத் போராடிக் கொண்டிருந்தனர் ஆனால் அவர்களால் போட்டியை இறுதிவரை எடுத்துச் சொல்ல முடியவில்லை. எனவே இன்றைய நாள் முடிவதற்கு உள்ளது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இன்றைய நாளில் சிறப்பாக செய்தனர். டாம் ஹார்ட்லி 7 லீச் மற்றும் ரூட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

போட்டி குறித்து போப் கூறுகையில், இரண்டாவது இன்னிங்ஸில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, விளையாடியது மற்றும் சிலவற்றை தவறவிட்டேன். எனது ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பாசிடிவாக இருக்க விரும்பினேன். நான் எனது தொழில் வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன், இந்தத் தொடருக்காக எனது நுட்பத்தை மாற்றினேன். குடும்பம் ஆரம்பமாகிவிட்டது, ஆனால் இப்போது கொஞ்சம் தூங்கலாம் என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை