பழைய பகையா? 2019 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்ன? உண்மையை உடைத்த அம்பத்தி ராயுடு.

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் சிலருக்கு மட்டுமே நீண்டகால வாய்ப்பானது வழங்கப்படுகிறது. அப்படி திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத வீரர் தான் அம்பத்தி ராயுடு. அம்பத்தி ராயுடு தன்னுடைய 19 வயதில் அண்டர் 19 இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆனால் சில சற்சயான நிகழ்வுகள

By ·

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் சிலருக்கு மட்டுமே நீண்டகால வாய்ப்பானது வழங்கப்படுகிறது. அப்படி திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத வீரர் தான் அம்பத்தி ராயுடு. அம்பத்தி ராயுடு தன்னுடைய 19 வயதில் அண்டர் 19 இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆனால் சில சற்சயான நிகழ்வுகளால் இந்திய அணியில் வாய்ப்பு குறைவாகவே கிடைத்து. இதனை தொடர்து கடந்த 2010 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து 2010 முதல் 2017 வரை மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின் 2017 முதல் 2023 வரை சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இது வரை இவர் இவ்விரு அணிகளையும் சேர்த்து 8முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளார். அதில் மும்பை அணிக்காக 3 கோப்பையையும் சென்னை அணிக்காக முன்று கோப்பையையும் வாங்கியுள்ளார். மேலும் 59 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களும் எடுத்து சராசரியாக 47.06 வைத்துள்ளார்.

இப்படி திறமை வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்மேனான ராயுடுவுக்கு கந்த 2019ஆம் ஆண்டு நடந்து உலககோப்பை போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இவருக்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்தார்கள் இந்திய அணியில் தேர்வு குழு. இது குறித்து அதிர்ப்பியையும் அம்பதி ராயுடு அப்போது வெளிப்டுத்தியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வர 6வது முறையாக ஐபிஎல் கோப்பையில் கையில் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமை பெற்றார் அம்பத்தி பபடிப்பட்ட நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த போட்டியோடு அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ராயுடு.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தெலுங்கு செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த சஞ்சு சாம்சன் தான் ஏன் 2019 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “இந்திய அணியின் தேர்வு குழுவில் உறுப்பினராக இருந்த ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ஒரு தனக்கு ஏற்பட்ட மோதலினால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கபப்ட்டதாக கூறினார்.

அதாவது 2019 ஆம் ஆண்டின் போது தேர்வு குழு உறுப்பினராக இருந்த வீரருடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்ககையில் தொடக்கத்தில் ஏற்பட்ட மோதல் தான் அன்று உலக கோப்பை அணியில் இருந்து என்னை விலக்க காரணம் என்று கூறியுள்ளார் அம்பத்தி ராயுடு. உலகக்கோப்பை போட்டியில் இருந்து தன்னை நீக்கிய பிறகு அது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் 3டி கண்ணாடி ஒன்றை பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை