வீடியோ : இப்பவே அந்த தலைவலி எதுக்கு – IPL தொடரில் தொடர்வது குறித்து தோனி பதில்.

ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி 10வது முறையாக பைனல் சென்றது. இந்நிலையில் தான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு கு

By ·

ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி 10வது முறையாக பைனல் சென்றது. இந்நிலையில் தான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்து போட்டி முடிந்ததும் பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நேற்று சென்னை vs குஜராத் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ருதுராஜ் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 வது ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

173 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாஹா நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் 12 ரன்களில் சாஹா அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். பின்னர் ஷனகா 17 ரன்களிலும், மில்லர் 7 ரன்களிலும், கில் 42 ரன்களில் வெளியேற போட்டி சென்னை அணியின் கைக்கு மாறி சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தோனி ஓய்வு குறித்து கூறியது :

இதன் முலம் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் பத்தாவது முறையாக பைனலுக்கு சென்றது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இறுதி விழாவில் பேசிய தோணியிடம் ஹர்ஷா போக்லே இந்த வருடத்தில் சென்னையில் விளையாடும் கடைசி போட்டி இது அடுத்ததாக அஹமதாபாத் செல்ல இருக்கிறீர்கள் என்று கூறினார். மீண்டும் இங்கே விளையாடுவீர்களா? என்று கேட்டார் .அதற்கு பதிலளித்த தோனி “எனக்கு தெரியவில்லை, 8 முதல் 9மதம் முடிவெடுக்க காலம் இருக்கிறது.

சொல்லப்போனால் ஐபிஎல் ஏலமே வரும் டிசம்பர் மாதம் தான் வரும். எனவே அந்த விஷியத்தை நினைத்து எதற்கு இப்போதே தலைவலி. எனக்கு யோசிக்க சில காலம் இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக சேனனி அணிக்காக நான் எப்போதுமே அணியிலேயோ அல்லது வெளியிலேயே கண்டிப்பாக இருப்பேன் என்றார். இந்த சீசனுக்கு முன்னர் ஜனவரி மதம் தான் என்னுடைய வேலைகளை முடித்து விட்டு பயிற்சிக்கு திரும்பினேன். பெரியவிஷியம் தான் என்றாலும் எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்றார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை