நான் அதுக்காக ருதுராஜ் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் ஜெயஸ்வால் பேச்சு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று நேற்று இரண்டாவது போட்டியில் மோதின. இந்தப் போட்டியானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று நேற்று இரண்டாவது போட்டியில் மோதின. இந்தப் போட்டியானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார் ஆனால் அது அவர்களுக்கு சரியான முடிவு இல்லை என்பது அதற்கு பின் தான் தெரிந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 அவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 235 ரன்களை குவித்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்களும் கிஷான் கிஷன் 43 பந்துகளின் 52 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் குர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்பு நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும் குவித்து இருந்தனர்.
அதன் பின்பு வந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் வந்த வேகத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை போர் சிக்சர் என்று அடித்து விளாசி இருந்தனர். ரின்கு சிங் ஒன்பது பந்துகளில் 31 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலமான இலக்கை அமைத்துக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் எலிஸ் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
236 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் சரியான தொடக்கம் கிடைக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழத்து 191 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே இந்திய அணி ரன்கள் வித்தியசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 45 ரன்களும் டிம் டேவிட் 37 ரன்களுக்கும் வேட் 42ஷார்ட் 19 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர்.
ரவி பிஷ்னோய் மூன்று விக்கெட் களையும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டையும் அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் நிறுத்தி இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ஜெயஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். 25 பந்துகளில் 53 ரன்களை குவித்து இருந்தார். அதில் 9 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடித்து இருந்தார். இது குறித்து ஜெயஸ்வால் கூறுகையில்,
இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, இன்று என்னுடைய பேட்டிங்கை ரசித்தேன். நான் எனது எல்லா ஷாட்களையும் ஆடவும், அச்சமின்றி இருக்கவும், பந்து வீச்சாளர்களை எடுக்கவும் முயன்றேன். எனது முடிவுகளில் நான் உறுதியாக இருந்தேன். என்னை வெளிப்படுத்துமாறு சூர்யா மற்றும் விவிஎஸ் பாய் ஆகியோர் என்னிடம் கூறியுள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரர்களைச் சுற்றி எப்படி என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் எப்போதும் நினைப்பேன். இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
கடந்த ஆட்டத்தில் ரன் அவுட்டிற்குப் பிறகு ருதுராஜை சந்தித்ததில் அது என் தவறு. அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன். ஸ்டோனிஸ் எனக்கு இடையில் இருந்தார், நான் உறுதியாக இருந்தேன் ஆனால் பின்னர் உறுதியாக தெரியவில்லை. நான் தவறான அழைப்பு விடுத்தேன். அது தவறு என்று நான் ஏற்றுக்கொண்டேன், அது நடக்கும். ருது பாய் அடக்கமாக இருந்தார், அடுத்த முறை நாங்கள் ஓடும்போது, பாதுகாப்பான சிங்கிள்ஸ் எடுப்போம் என்று ஜிம்மில் கூறினார். எனது உடற்தகுதி மற்றும் ஷாட்களை விளையாடுவதில் நான் மிகவும் உழைத்தேன். இந்த மட்டத்தில் மன விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக நான் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.