எனக்கும் அந்த வார்த்தைக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது – வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேச்சு.

இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் எதிரான இந்திய அணி விளையாட உள்ளது.இதற்க்கு முன்னதாக தென்னாப

By ·

இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் எதிரான இந்திய அணி விளையாட உள்ளது.இதற்க்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பை அவர் அளித்து இருந்தார்.

இருப்பினும் இந்திய அணியால் அந்த தொடரை வெல்ல முடியவில்லை சமன் மட்டுமே படுத்தி இருந்தது.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ‘பாஸ்பால்’ ஆட்டத்தை பற்றி சில கருத்துகளை வெளிப்படுத்தினார். எனக்கு இந்த வார்த்தையுடன் தொடர்பில்லை என்று கூறினார், ஆனால் இங்கிலாந்தின் அணுகுமுறைக்காக பாராட்டினார், இது சமீபத்திய ஆண்டுகளில் அவர்களுக்கு வெற்றிகரமாக உள்ளது.

இது குறித்து அவர் பும்ரா கூறுகையில், பேஸ்பால் என்ற வார்த்தையுடன் எனக்கு உண்மையில் தொடர்பில்லை. ஆனால் அவர்கள் வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் மற்றும் எதிரணியை ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள், உலகிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட மற்றொரு வழி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு பந்துவீச்சாளராக, நான் நினைப்பது என்னவென்றால், அது அப்படியே இருக்கிறது.

நான் விளையாடுகிறேன், அவர்கள் அதற்குச் சென்றால், மிக வேகமாக விளையாடினால், அவர்கள் என்னை சோர்வடையச் செய்ய மாட்டார்கள். என்னால் நிறைய விக்கெட்டுகளை எடுக்க முடியும். நான் எப்பொழுதும் விஷயங்களை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது பற்றி யோசிப்பேன், அவர்களுக்குப் பாராட்டுகள் ஆனால், ஒரு பந்துவீச்சாளராக, நீங்கள் விளையாட்டில் இருக்கிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது சிறப்பானது, கேப்டன் பதவி இன்னும் சிறப்பாக இருந்தது.

அது மிகப்பெரிய கவுரவம். டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது சிறந்தது, கேப்டன் பதவி இன்னும் சிறப்பாக இருந்தது என்றும் அவர் கூறி இருந்தார். இந்திய அணியானது நாளை மறுநாள் முதல் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ள நிலையில் இந்திய அணிக்கு ஒரு பெரிய பாதிப்பாக விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்க்காக அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை