“நான் இதை தொடர்ந்து செய்து தான் அவருடைய விக்கெட்டை வீழ்தினேன்” – அக்சர் பட்டேல்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்

By ·

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் இருந்த உலகக் கோப்பை பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் களம் இறங்கி விளையாடினார்.

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக சூரியகுமார் யாதவர் தான் செயல்பட்டு வந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்த நிலையில் 200 ரண்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆதிக்கத்தால் இந்திய அணியால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.

இந்திய அணி அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும் ஜெயஸ்வால் 37 ரன்களுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்32 ரன்களுக்கு மட்டும் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிருந்து வெளியே அனுப்பி ஏமாற்றத்தை அளித்தார். உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. எனவே இந்தியா 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

175 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்களுக்கு சற்று பயத்தை தந்தது. இருப்பினும் இந்திய அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக வேட் 36 ரன்களுக்கும் ஹெட் 31 ரன்களும் ஷார்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை இருந்தனர் எனவே இந்திய 20 ரன்களுக்கு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 16 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இது குறித்து அவர் கூறுகையில்,

முதல் ஆட்டத்தில் இருந்தே நான் நன்றாகப் பந்துவீசினேன், அதனால் ரன்களுக்கான எனக்கு மன அழுத்தத்தைத் தரவில்லை. என்னுடைய பலத்தால் எப்படி பந்துவீசுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன், ஒரு போட்டியில் நீங்கள் ரன்களுக்குச் சென்றாலும், உங்கள் பலத்தை நீங்கள் கடைப்பிடிப்பீர்கள், மனதளவில் வலுவாக இருக்கிறீர்கள், ஸ்டம்பை ஸ்டம்பிற்குப் பந்துவீசுவீர்கள். வேட் இடது கையாக இருந்தாலும் அவரைத் தாக்கிக்கொண்டே இருக்க முயற்சித்தேன்.

நான் எனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியிருந்தது, அவர் என்னை அடித்தால் என்ன என்று பயப்படுவதில் அர்த்தமில்லை. இன்று நான் பெற்ற விக்கெட் ஒப்பீட்டளவில் ஸ்லோ பந்தில் இருந்தது, நீங்கள் ஒரே ஒரு வழியில் விக்கெட்டுகளைப் பெற முடியாது. இடைவேளையில் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்; இந்த சிறிய மாற்றங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் ஒரு போட்டியில் அவற்றை முயற்சிக்கும்போது மட்டுமே விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை