நான் எல்லாம் அவரிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். அவர் தான் எனக்கு ஹீரோ – ஷாகின் அப்ரிடி.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 31வது பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. புள்ளி பட்டியல் பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்திலு

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 31வது பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. புள்ளி பட்டியல் பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணி கடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வி தழுவியும் பங்களாதேஷ் அணி கடந்த 5 போட்டிகளிலும் தோல்வி தழுவி வருகிறது.

பாகிஸ்தான் அணி மீதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதும் பல்வேறு புகார்கள் தற்பொழுது எழுந்து வருகின்றது. அதில் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானனை வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் செல்லுமா என்பது கேள்விக்குறியே?

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்களில் பாகிஸ்தான் அணியிடம் சுருண்டது. பங்களாதேஷ் அதிகபட்சமாக முகமதுல்லா 56 ரன்கள் லிட்டன் தாஸ் 45 ரன்கள் கேப்டன் ஷாகிப் உல் ஹாசன் 43 ரன்கள் குறித்து இருந்தனர். அதன்பின் வந்த மிராசை தவிர அனைத்து வீரர்களும் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு எண்களிலே ஆட்டம் இழந்து வெளியேறி பங்களாதேஷ் அணிக்கு பெரும் சோகத்தை அளித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளையும் வாசிம் 3 விக்கெட் களையும் ராப் இரண்டு விக்கெட்களையும் இப்திகார் மற்றும் உஸ்மான் மீர் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்திருந்தனர்.

205 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் சாமான் 81 ரண்களும் சபிக் 68 ரண்களும் ரிஸ்வான் 25 ரன்களையும் குவித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் மிராஸ் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்றைய போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஷாகித் அப்ரிடி. இது குறித்து அவர் கூறுகையில் சாதனைகள் என்பது உடைக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

அதுவும் நான் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்திருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. ஷாகித் அப்ரிடி எப்போதும் எனக்கு சில ஆலோசனைகளை வழங்குவார். அவர்தான் என்னுடைய முன்மாதிரியான ஹீரோ. அவரைப் போல் தான் நான் விளையாட தற்போது முயற்சி செய்து வருகிறேன். நாங்கள் ஆரம்ப கட்டத்தில் தோல்வியை தழுவியதால் முதல் 4 இடங்களுக்கு வருவதற்கு தற்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். எங்களால் போட்டியை முடிந்த அளவு சீக்கிரமாக முடித்துவிட்டு எங்களின் ரன் ரேட்டை உயர்த்துவதற்காக நாங்கள் முயற்சி செய்தோம். நாங்கள் ஒரு அணியாக சில போட்டிகளை சரியாக விளையாடவில்லை நாங்கள் சில முயற்சிகளை பெரிய தவறு செய்தும் நிறைய கேசுகளை விட்டு விட்டோம். சிறந்த பில்டிங் இருந்திருந்தால் எங்களுக்கு முடிவுகளும் சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் ஷாகித் அப்படி கூறியிருந்தால்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை