“நான் பெர்ஃபார்மென்ஸை நம்புகிறேன்” உலக கோப்பை 2023 குறித்து கங்குலி கணிப்பு.
கடந்த 2011ஆம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பைபை வென்றது. மேலும் அந்த கோப்பையானது இந்தியாவின் வெகுநாள் பாரத்தையே இறக்கி வைத்தது. அதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியை வென்ற இந்திய அணியால் அதற்கு பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு ம
கடந்த 2011ஆம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பைபை வென்றது. மேலும் அந்த கோப்பையானது இந்தியாவின் வெகுநாள் பாரத்தையே இறக்கி வைத்தது. அதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியை வென்ற இந்திய அணியால் அதற்கு பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை சிறப்பாக செயல்பாடு லீக் ஆட்டத்திற்கும் செல்லவும் இந்திய அணியால் இறுதிநேரத்தில் அதே போன்று ஆடமுடியாவில்லை.
இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை 2023யை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் இந்தியா வென்றியடையுமா என்ற எதிர்பாப்பு நிலவுகிறது.ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பாட விலையோ என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவன்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் தேர்வாளராக இருந்த கங்குலி இந்த ஒருநாள் உலகக்கோப்பை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நான் முன்பு நடந்தது குறித்து அதிகமாக நம்புவது கிடையாது. ஆனால் இப்போது நான் நம்புகிறேன். நான் கிரிக்கெட் அணிகளின் செயல்திறனை நம்புகிறேன். ரோஹித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் 34 -35 வயது தான் ஆகிறது. எனக்கு அடுத்த உலகக்கோப்பை போட்டியில் என்ன நடக்க போகிறது என்று தெரியாது. முன்னரெல்லாம் 4 வருடங்களுக்கு ஒருமுறை தான் கிரிக்கெட்டில் உலக கோப்பை நடைபெறும், அதற்கு பிறகுதான் சாம்பியன் டிராபி வந்தது.
ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் உலககோப்பையானது ஒவ்வொரு ஆண்டும் டி20 அல்லது 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே வெற்றியப்பெறுவது என்பது அணியின் செயல்திறனை பொறுத்தது. எனவே ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உலக கோப்பையை வெல்வதற்கு நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். இதனை அவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக செய்ய மாட்டார்கள் அணி வெற்றியடைய வேண்டும் என்று செய்வார்கள். அதுதான் பெரியது என்றார் கங்குலி.
கடந்த உலகக்கோப்பை 2011 வெற்றியின் போது போட்டி முடிந்ததும் விராட் கோலி பேசுகையில் கடந்த 21 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை தன்னுடைய தொழில் சுமந்தார், எனவே அவரை த்ற்போது நாம் சுமக்க வேண்டிய நேரம் இது என்று மும்பை வான்கடே மைத்தனத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் 12,000 ரன்களையும் கடந்து 46 சதங்களுடைய விராட் கோலி தன்னுடைய இரண்டாவது உலக கோப்பைக்காக 12 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பலதொடர் கொண்ட போட்டியிலும், அயர்லாந்திற்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் மோத இருக்கிறது. இதனையடுத்து ஆசிய உலகக்கோப்பை போட்டியில் இந்தியா விளையாட இருக்கிறது. மேலும் அயர்லாந்து போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா திரும்புவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.