நான் எனது பாணியில் விளையாடினேன். இது எல்லாம் தோனி பாயிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் – ஷிவம் துபே.

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந

By ·

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இந்த தொடரில் ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்திய அணியை வழி நடத்த உள்ளார். இதில் முதல் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தது. இந்த மைதானத்தில் பனி சற்று அதிகமாக இருந்ததால் வீரர்களுக்கு போட்டி சற்று கடினமாகவே தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரில் எந்த ரன்னையும் அடிக்கவில்லை.

அதன் பின் நிதானமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை குவித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களும் ஓமர்சாய் 29 ரன்களும் மற்றும் சார்டன் 25 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

159 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 60 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 31 ரன்களும் திலக் வர்மா 26 ரன்களும் எஅடித்து இருந்தனர். இறுதியில் வந்து ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு 9 பந்துகளில் 16 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் ஓமர்சாய் 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார். எனவே இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது குறித்து ஷிவம் துபே கூறுகையில், இது மிகவும் குளிராக இருந்தது என்று நினைக்கிறேன், ஆனால் நான் இந்த மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுவது…. நம்பர் 4 இல் பேட்டிங் செய்வது எனக்கு கொஞ்சம் அழுத்தமாக இருந்தது, ஆனால் என் மனதில் ஒரு விஷயம் இருந்தது. எனது பாணியில் கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.எனது பாணியில் இருந்து, முதலில் 2-3 பந்துகளில் நான் கொஞ்சம் அழுத்தமாக உணர்கிறேன்.

ஆனால் அதன் பிறகு நான் பந்தைப் பற்றி அதிகம் யோசிப்பேன், டி20களில் என்னால் பெரிய சிக்ஸர்களை அடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் நான் எப்படியும் ரன்களை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும். நான் அதை எம்எஸ் தோனியிடம் கற்றுக்கொண்டேன், போட்டியை நன்றாக முடிக்க விரும்பினேன். நான் எப்போதும் மஹி பாயிடம் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் ஒரு பெரிய ஜாம்பவான். நான் எப்போதும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டே இருப்பேன். அவர் எப்போதும் என்னை மதிப்பிடுகிறார், அது தொடர்ந்து நன்றாக விளையாடுவதற்கான உந்துதலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை