சச்சின் பேட்டிங் செய்யும்போதெல்லாம் அவரது ஷாட்களை காப்பி அடிக்க ஆரம்பித்தேன் – பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்த வீரேந்திர சேவாக்.
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பயப்படாமல் மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற சேவாக். ஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடு
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பயப்படாமல் மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற சேவாக். ஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடுவதில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் உட்பட பல சாதனைகளை சேவாக் படைத்துள்ளார்.
தற்போது சேவாக் வயது முதிர்ச்சி காரணமாக வெளியேறினாலும் களத்திற்கு வெளியே, அவரது ஆளுமை மற்றும் நகைச்சுவையான நகைச்சுவை உணர்வு அவரை ரசிகர்கள் மற்றும் மற்ற வீரர்களை கவர்ந்திழுக்கிறது. ஓய்வு பெற்ற பிறகும், சேவாக் வர்ணனையாளர் மற்றும் வழிகாட்டியாக கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.
சேவாக் கூறியது :
நான் சச்சின் விளையாடுவதை பார்க்கத் தொடங்கியபோது நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. 1992 உலகக் கோப்பையின் போது நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறப் போகிறது என்று தெரிந்ததும், நாங்கள் பக்கத்து வீட்டிற்கு சென்று டிவி பார்த்தோம். ஏனென்றால்அந்த நேரத்தில் எங்களிடம் கேபிள் இல்லை.
அப்போதுதான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு 19 வயது இருக்கும். சச்சினுடைய ஷாட்டுகள் எனக்கு பார்க்க ஆச்சரியமாக இருந்தது. எனவே அவருடைய ஷாட்டுகளை காப்பி அடிக்க ஆரம்பித்தேன். சச்சினின் ஷாட்டுகளை ஆடுவதால் நீ சச்சின் ஆக முடியாது என்று என்னுடைய சகோதரர் கலாய்ப்பார். அந்த நேரத்தில் இருந்து நான் கிரிக்கெட் பார்க்கவும் விளையாடவும் ஆரம்பித்தேன்.
டென்னிஸ் பந்தில் ஆரமிப்பித்து லெதர் பந்திற்குச் சென்றேன் என்றார் சேவாக். மேலும் பேசிய அவர் கூறுகையில் ” கடந்த 2003 லிருந்து 2004 வரையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின் போது சச்சின் வெளியே அழைத்து செல்வார். புதிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள செயல்வார். பிரபலமான சுஷி சாப்பிடலாம் என்பார். எனக்கு சுஷி என்றால் என்னவென்று தெரியாது. பிறகு என்னை ஜப்பான் உணவகத்திற்கு அழைத்து சென்றார்.
நான் என்ன வகையான உனனை சாப்பிட போகிறேன் என்று ஆவலாக இருந்தேன். நான் சரி ரொட்டியும், டாலும் சாப்பிடுவோம் என்று நினைத்தேன் ஆனால் சத்தின் டெண்டுல்கரின் எண்ணம் வேறு வகையான உணவுகளின் மீது இருந்தது. மேலும் தான் சைவ உணவுளை சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகுதான் கோழிகறி போன்றவற்றை உன்ன தொடங்கியதாக பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினார் வீரேந்திர சேவாக்.