தோல்விக்கு இதுதான் காரணம் – குஜராத்தின் படு போட்டிக்கு பிறகு மனம் திறந்த ஹர்திக் பாண்டியா.

ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் பலம் வாய்த்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் டாஸை வென்று முதலில் கலரமிறங்கிய டெல்லி அண

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் பலம் வாய்த்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் டாஸை வென்று முதலில் கலரமிறங்கிய டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை 4 ஓவர்களிலேயே வீழ்த்தி பெரிய அடி கொடுத்தது குஜராத்.

இருந்த போதிலும் பொறுமையாக ஆடிய அக்சர் மற்றும் அமன் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்து 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை எடுத்தனர் டெல்லி அணி. இந்நிலையில் 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களம் கண்ட குஜராத் அணியால் 20 வது ஓவர்கள் முடிவில் 125 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்கில் அற்புதமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் டெல்லியின் ஹீரோவாக மாறினார்.

ஹர்திக் பாண்டிய கூறியது :

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ஹார்த்திக் பாண்டியா தோல்வி குறித்து கூறினார் “130 ரன்களைத் துரத்துவது கடினம் அல்ல, ஆனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். சில விக்கெட்டுகளை மட்டும் இழந்து கடைசியில் ராகுல் எங்களை ஆட்டத்தில் இருந்து மீட்டார். நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், ஆனால் கடைசியில் வெற்றிபெற முடியவில்லை. அணியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

மிகவும் வருத்தம் :

போட்டியின் இடையே அதிக ரன்களை எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் விக்கெட் மிகவும் சிறப்பாக இருந்தது. 10 ஓவர்கள் 80 ரன்கள் எடுத்திருப்போம். இறுதியில் ராகுல் திவாத்தியா எங்களை மீண்டும் பெட்டிக்குள் கொண்டு வந்தார். ஆனால் நான் என்னுடைய ரிதத்தை இழந்ததால் தோல்வியை தழுவினோம். முகமது ஷமியை மிகவும் சிறப்பாக பந்துவீசி 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். நான் அவரை நினைத்து வருந்துகிறேன். இதனால் பேட்ஸ்மேன்களும் ஏமாற்றமடைந்தனர்.

விக்கெட் அதிகம் பலன் கொடுத்தாக நினைக்கவில்லை. ஆனால் முழு பெருமையும் ஷமிக்கே சேரும். இன்னும் நிறைய போட்டிகள் மீதம் இருக்கிறது. இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொண்ட பிறகு அதனை சரிசெய்து முன்னேறுவோம். இவையெல்லாம் தொடர்ந்து நடக்கும் அதுதான் ஐபிஎல்லின் சிறப்பு. எங்களுடைய அணி இன்னமும் புளிப்பாட்டியலில் மேலே உள்ளது இருந்தாலும் இன்னமும் எங்களுடைய விளையாட்டை சரியாக எடுத்து செல்ல வேண்டும் என்றார் ஹர்திக் பாண்டிய

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை