குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று நினைத்தேன் – அம்பதி ராய்டு.

குஜராத் அணி இறுதி போட்டிக்கு வரக் கூடாதுனு நினைத்தேன் என ராய்டு கூறினார். ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்ப

By ·

குஜராத் அணி இறுதி போட்டிக்கு வரக் கூடாதுனு நினைத்தேன் என ராய்டு கூறினார். ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி கோப்பையை கைப்பற்றியது. இது குறித்து பல வீரர்கள் ட்விட்டரில் அவர்களது கருத்தினை தெரிவித்து வந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். குஜராத் அணியின் அதிக பட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு அதிக பட்சமாக சாஹா 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்களிலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களை குவித்தனர்.

215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. மழையின் காரணமாக நிருத்தி வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 26 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.

தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் ஜடேஜாவின் அதிரடியால் இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 5 வது மூறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் அம்பதி ராய்டு. வெற்றிக்கு பின் தோனி ராய்டு மற்றும் ஜடேஜாவின் கைகளால் கோப்பையை வாங்க வைத்து நெகிழவைத்தார். தற்போது ராய்டு கூறுகையில் நான் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான அரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளை கொண்ட குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று நினைத்தேன்.” சேப்பாக்கத்தில் மும்பை அணியை வீழ்த்தியது தான் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.” என்று அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை