ஆஸ்திரேலியா தொடர் தான் என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்.
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவரை பல முன்னணி வீரர்களே சுழற்பந்து மந்திரவாதி என்று கூறும் அளவிற்கு பல சாதனைகளையும், இந்தியாவிற்காக பல முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர்
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவரை பல முன்னணி வீரர்களே சுழற்பந்து மந்திரவாதி என்று கூறும் அளவிற்கு பல சாதனைகளையும், இந்தியாவிற்காக பல முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசிய பேட்டி ஒன்றில் தான் 2023 பார்டர்-கவாஸ்கர் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா தொடர் தன்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்று அவருடைய மனைவியுடம் கூறியதாக அந்த பெட்டியில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் “விக்கெட்டுகள் அல்லது ரன்கள் மட்டுமே எடுக்காமல் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை நானே மாற்றங்களுக்கு புதுப்பித்து கொள்ளும் தம்மை என்னிடம் இருந்தது. கிரிக்கெட் வீரர்களோ அல்லது யாராக இருந்தாலும் அவர்கள் வயதாகும்போது உண்மையில் பாதிக்கும் ஒரு விஷயம் பாதுகாப்பின்மை. கிரிக்கெட் வீரர்கள் வயதாகும்போதும் அனுபவமிக்கவர்களாக சிக்கிக்கொள்கிறார்கள்
அந்த நேரத்தில் நீங்கள் எதையாவது இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள், இறுதியில் உங்கள் கழுத்தை நீங்களே உடைத்துக்கொள்கிறீர்கள் என்றார் அஸ்வின். மேலும் தன்னுடைய மூலங்களால் பற்றி பேசிய அஷ்வின் பங்களாதேஷ் தொடரில் இருந்து திரும்பியதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் தனது கடைசி தொடராக இருக்கும் என்று தனது மனைவியிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது செயலை மாற்றியமைக்க விரும்புவதாகவும் கூறினார். அது தொடர்பாக பேசுகையல் பந்துவீச்சில் தரையில் இறங்கும் போது என் முழங்கால் சிறிது சிறிதாக வளைந்தது. டி20 உலகக் கோப்பையின் காரணமாக நான் போதுமான வேலைகளைச் செய்யவில்லை, ஆனால் பந்து வரும் விதத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை. என்னுடைய பந்துவீச்சு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவது போல இருந்தது என்றார் அஸ்வின்.
மேலும், வங்கதேசத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, அவரது முழங்கால் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். மேலும், கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக தான் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாகவும், பந்து வீசாமல் இருப்பது மிகவும் வேடிக்கையான மற்றும் அபத்தமான நடவடிக்கை என்றும் அவர் மீண்டும் கூறினார். எனவே முழங்கால் அசௌகரியத்தைப் போக்க தனது செயலில் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்தார், அது வேலை செய்தது என்றும் அந்த பேட்டியின் போது தெரிவித்தார் அஸ்வின்.