நான் அவர் சொன்னதைத்தான் செய்ய முயற்சித்தேன். வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் டோனி டி ஜோர்ஜி.

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத

By ·

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு சிறப்பாகவே கை கொடுத்தது என்று சொல்லலாம். 46.2 ஓவர்களில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே இந்திய அணியால் 211 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் முதல் போட்டியில் சொதப்பியது போலவே இன்றும் அவர் 4 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 83 பந்துகளில் 62 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 56 ரன்களும் மற்றும் அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை மட்டுமே அடித்து இருந்தன. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

212 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 42.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை எடுத்து இரண்டாவது போட்டியை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 119 ரன்களையும் ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களையும் ராஸ்ஸி வான் டெர் டுசென்36 ரன்களையும் அடித்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரிங்கு சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது தொடரை சமன் செய்துள்ளது. இது குறித்து ஆட்டநாயகன் டோனி டி ஜோர்ஜி கூறுகையில்,

சதத்தை எட்டுவது உணர்சிகளின் வெள்ளம் என்று சொல்லலாம். என் அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். உங்கள் தலையில் நிறைய விஷயங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். உங்களுக்காகக் கவனித்து, உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஜேபி (டுமினி) அவர்கள் என்னிடம் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி என்னிடம் பேசினார், நான் அதை செயல்படுத்த முயற்சித்தேன். வாண்டரர்ஸிலும் செல்ல விரும்பினேன்.

இன்று என்னால் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. நான் அதை எப்படி செய்வேன் என்று தெரியவில்லை. நான் மாற்றியமைக்கக்கூடியவன், வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒழுக்கமானவன் என்று நினைக்கிறேன். இருப்பினும் இன்னும் சிறப்பாக வர வேண்டும். ஆனால் இசைக்குழுவினரிடம் சென்று அனைவரும் கைதட்டி அவர்களைப் பார்ப்பது அருமை. இது போன்ற ஒரு தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை