எனது விளையாட்டை நான் அதிக அளவில் புரிந்து கொண்டேன். அது தான் நான் சிறப்பாக பந்துவீச காரணம் – கலீல் அகமது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டின
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை அணி இதற்க்கு முன்பு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இன்றைய போட்டியில் மோதியது.
இதில் டெல்லி அணியின் சிறப்பான தொடக்க ஆட்டத்தால் ஆட்டத்தாலும் அதன் பின்பு அந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தாலும் டெல்லி அணி அவ்ளோ பெரிய இலக்கை குவித்தது இதில் டெல்லி அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்கள் அடித்திருந்தனர். அதன் பின்பு வந்து ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டிய 32 பந்துகளில் 51 ரன்கள் குறித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார்.
சென்னை அணியின் ஆதிக்கம் ஒரு சில ஓவர்களில் மட்டுமே இருந்தது அதன் பின்பு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஆதிக்கம் தான் இந்த போட்டியில் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். இதில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களான பத்திரனா மூன்று விக்கட்டுகளையும் ஜடேஜா மற்றும் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர் எனவே குவித்தது டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது.
அதன் பின் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தது. டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ரஹானே 34 ரன்களிலும் மற்றும் மிட்சல் 35 ரன்களிலும் அடித்து இருந்தனர். மிடில் ஆர்டர் சொதப்பவே அதன் பின் வந்த தல தோனி வந்த முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியை காட்ட தொடங்கினார்கள். அவர் 16 பந்துகளில்37 ரன்களை அடித்து இருந்தார். அதில் 3 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடித்து இருந்தார். இருப்பினும் சென்னை அணி 20 ரன்னில் தோல்வியை தழுவியது.
அந்த போட்டியில் சிறப்பாக வீசிய கலீல் அகமது கூறுகையில், பந்தை நான் விரும்பியதைச் செய்ய, உள்நாட்டுப் போட்டிகளில் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கடந்த ஆறு மாதங்களில் நான் சில ஆட்டங்களில் விளையாடினேன், அதனால் நான் அதிகமாக விளையாடியதாக உணர்கிறேன். , எனது சொந்த விளையாட்டை நான் எவ்வளவு அதிகமாக புரிந்துகொண்டேன், அதைச் செயல்படுத்த முயற்சிக்கிறேன்.” என்றும் அவர் கூறினார்