ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபியில் இருந்த அதே மனநிலையில் விளையாட விரும்புகிறேன் – அஜிங்க்யா ரஹானே.

ஐபிஎல் போட்கள் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான ஐபிஎல் சீசனுக்கு பிறகு சென்னை அணிக்காக பல நேரங்களில் சிறப்பாக ச

By ·

ஐபிஎல் போட்கள் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான ஐபிஎல் சீசனுக்கு பிறகு சென்னை அணிக்காக பல நேரங்களில் சிறப்பாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியது பாராட்டிற்குரியது.

ஏனென்றால் அஜிங்க்யா ரஹானே சமீப காலமாக ரெட்-பால் கிரிக்கெட் போட்டிகளில் மோசமாக ஆட்டமிழந்ததன் காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டு வருடங்கள் கடினமான உழைப்பிற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்ந்துள்ளார். உள்நாட்டு சுற்றுகளிலும் CSK அணியிலும் சிறப்பான செயல்திறனை காட்டிய ரஹானே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் அவர் மீண்டும் களமிறங்குகிறார்.

குறிப்பிடதக்க வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விராட் கோலி இல்லாத நிலையில் இந்தியாவை புகழ்பெற்ற தொடர் வெற்றிக்கு இட்டுச் செல்லும் பொறுப்பு ரஹானேவிடம் பந்த நிலையில் அதனை திறன்பட செய்து முடித்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது WTC இறுதி போட்டிக்காக இங்கிலாந்து சென்றிருக்கும் ரஹானே பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் பேசிய ரஹானே “18-19 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளேன். நல்லது அல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், எனது கடந்த காலத்தைப் பற்றி நான் சிந்திக்க விரும்பவில்லை. நான் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன், நான் என்ன செய்தாலும் அதைச் சரியாக செய்ய விரும்புகிறேன். CSK க்காக விளையாடும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஐபிஎல்லுக்கு முன்னர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தேன். அதை நினைத்தான் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபிக்கு வருவதற்கு முன்பு நான் காட்டிய அதே என்னத்தோடும் அதே மனநிலையோடும் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். டி20 அல்லது டெஸ்ட் என பார்மட் பற்றி யோசிக்க விரும்பவில்லை. டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்கிறேன், எனவே பழைய விஷயங்களை விளையாட்டை சிக்கலாக்காமல் எளிமையாக வைத்துக்கொள்வது எனக்கு சிறந்தது என்று தோன்றுகிறது என்று கூறினார் ரஹானே.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை