இந்த விருது எனக்குனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சி – தமிழக வீரர் சாய் சுதர்ஷன் பேச்சு.
உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னா சூப்பர
உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்றொரு பக்கம் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு சற்றும் கை கொடுக்கவில்லை. மும்பை அணியின் கேப்டன்சி மாற்றம் காரணமாக அணிக்குள் பனிப் போர் நிலவி வருகிறது. அந்த வகையில் நேற்று மைதானத்தில் செய்த விஷயங்களும் நடைபெற்றது. மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டு வந்தனர் அதை நாம் பார்த்து இருப்போம்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் ஆட்டக்காரர்கள் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தாலும் அதன் பின் வந்து வேகத்தில் அவ்வப்போது சீரான இடங்களில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். எனவே குஜராத் டைடன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
அதன்பின் 169 இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றொரு பக்கம் நின்று நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். மும்பை அணையின் அதிகபட்சமாக ப்ராவிஸ் 46 ரன்கள் அடித்து இருந்தார். எனது மும்பை இந்தியன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ரண்களை மட்டுமே எடுத்த எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் ஆட்டநாயகன் விருது வென்ற தமிழக சாய் சுதர்ஷன் கூறுகையில், முதல் இன்னிங்ஸில் கூட அது சற்று கடினமாகவும், இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு காரணமாகவும் அவர்களால் சில ஷாட்களை விளையாட முடிந்தது, ஆனால் நாங்கள் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எனது அணிக்காக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு கூடுதல் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்கிறேன். சில பந்துகளுக்குப் பிறகு, நீங்கள் எல்லா இடங்களிலும் கடினமாகச் செல்லக்கூடிய ஒரு விக்கெட் இது என்று நான் உணர்ந்தேன்.
மேலும் வேகத்தை அதிகரிக்க விரும்பினேன். இரண்டாவது இன்னிங்ஸில் பல சிறந்த பங்களிப்புகள் மற்றும் இந்த விருதைப் பெற்றதற்காக நான் உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். ஒரு பேட்டராக, அவர்கள் வேகத்தை எடுத்தபோது, எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்று நன்றாகச் செயல்பட்டபோது எனக்கு கடினமாக இருந்தது. கில் கேப்டன்சி புதியது போலவே தெரியவில்லை அவர் ஏற்கனேவே பல முறை கேப்டன்சி செய்தது போல இருந்தது என்றும் அவர் கூறினார்.