“உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் ஃபைனலில் விளையாட ஆசை இருந்தது” ஏனென்றால் – WTC பைனலில் நீக்கப்பட்டது குறித்து பேசிய அஸ்வின்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கியது பெரும் தவறு என்று முன்னாள் வீரரகள் முதற்கொண்டு பல ஜாம்பவான்களும் கருதினார்கள

By ·

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கியது பெரும் தவறு என்று முன்னாள் வீரரகள் முதற்கொண்டு பல ஜாம்பவான்களும் கருதினார்கள். ஏனென்றால் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நம்வேர் ஓன் பவுலராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியில் உள்ள இடது கை ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை மற்றும் முதல் நாளுக்குப் பிறகு அது மாறிய மேற்பரப்பு போன்றவற்றால், ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா ஆஃப் ஸ்பின்னர் நாதன் லியான் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த விளையாட்டில் பெரும் பங்கு வகித்தனர் மற்றும் விக்கெட்டுகளை எடுத்தனர், இது விமர்சனங்களைத் தூண்டியது.

இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின் தன்னை உலகக்கோப்பை இறுதி போட்டியில் இருந்து நீக்கியது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” பதிலளிப்பது கடினமான கேள்வி என்று நினைக்கிறன்? ஏனென்றால் WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு நாம் இதை பற்றி பேசுகிறோம். நான் விளையாட விரும்பினேன், ஏனென்றால் WTC பைனல் செல்வதில் நான் ஒரு பங்கைக் கொண்டிருந்தேன். கடந்த இறுதிப் போட்டியில் கூட நான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி நன்றாக பந்து வீசினேன். 2018-19 முதல், வெளிநாடுகளில் எனது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது அதன் மூலம் அணிக்காக நான் வெற்றிபெற முடிந்தது.

கடைசியாக நாங்கள் இங்கிலாந்தில் விளையாடியபோது ​​அது டிரா செய்யப்பட்ட டெஸ்டுடன் 2-2 ஆக இருந்தது, மேலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்தில் சரியாக இருந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு அதே போன்று இருந்தால் சரியாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கலாம். நான்காவது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் அப்போது முடிந்த அளவு ரன்களை எடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் சுழற்பந்து வீச்சாளர் தங்களின் திறமைகளை காட்டுவார்கள் இது முற்றிலும் ஒரு மனநிலையான சம்மந்தப்பட்ட விஷயம் என்றார் அஸ்வின்.

மேலும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடதது குறித்து கேட்டபோது என்னைப் பொறுத்தவரை இது ஒரு பின்னடைவு அல்ல. இது ஒரு முட்டுக்கட்டை, நான் அதை கடந்துவிட்டதால் நான் முன்னேறுவேன். யாராவது உங்களை முதன்முறையாகத் வீழ்த்தினாலு உங்களுக்கு வலிக்கும். உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒருமுறை நீங்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதனால் நீங்கள் பழகி அதில் இருந்து எப்படி மீள்வது என்பது உங்களுக்குத் தெரியும். அதுதான் வாழ்க்கை.

நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்களோ? இல்லையோ? எப்படி இருந்தாலும் அது பின்னடைவுதான். அதை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார் அஸ்வின். இந்நிலையில் அஸ்வின் உலக சாம்பியன் ஷிப் போட்டியை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்களுடன் இணைந்து விளையாடி வருகிறார் என்பது குறிபிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை