அவர் அடித்த அந்த 141 ரன்கள் விராட் கோலியின் மாஸ்டர் பீஸ் – இயன் சேப்பல் பாராட்டு
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே இடத்தை பிடித்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் டாப் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக சொல்லிட்டு வருகிறார்.
இந்நிலையில் எத்தனை மகத்தான இன்னிங்ஸ் விளையாடியிருந்தாலும் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவை முதல் முறையாக கேப்டனாக விராட் கோலி தலைமை தாங்கிய டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்தே மிகவும் சிறந்தது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில் “2012இல் மகத்தான சச்சின் விளையாடிக் கொண்டிருந்த போது வாக்காவில் நடைபெற்ற போட்டியில் 44, 75 ரன்கள் குவித்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தன்னுடைய திறமையின் குழுவை காட்டிய அவர் மற்ற வீரர்கள் சொதப்பிய போது தூணாக நின்று சிறப்பான சதமடித்தார். அதுவே அவர் இந்தியாவின் மகத்தான அடுத்த பேட்ஸ்மேன் என்பதை மற்றவர்களை ஒப்புக்கொள்ள வைத்தது
அதன் பின் 2 வருடங்கள் கழித்து மீண்டும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போட்டியில் 2 சதங்கள் அடித்த அவர் கிட்டத்தட்ட மறக்க வெற்றியின் அருகில் அழைத்து வந்தார். குறிப்பாக சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் 2வது இன்னிங்ஸில் அடித்த 141 ரன்கள் மாஸ்டர் பீஸ் ஆகும். அந்த இன்னிங்ஸ் விராட் கோலியின் அற்புதமான தலைமை பண்பு மற்றும் சந்தேகமமற்ற திறமையை காட்டியது
குறிப்பாக 16 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 100 பந்துகளில் 80 ரன்கள் என்ற விகிதத்தில் பேட்டிங் செய்த அவர் நேதன் லைன் சுழலை அற்புதமாக எதிர்கொண்டார். அதிலும் சவாலான பிட்ச்சில் அவர் அடித்த கவர் ட்ரைவ் ஆஸ்திரேலியர்களை வெற்றிக்காக கடுப்பாக வைத்தது. அந்த வகையில் கேப்டனாகவும் வீரராகவும் அவர் நிறைய சாதனைகள் படைத்திருந்தாலும் அப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் அபாரமானது என்று கூறியுள்ளார் இயன் சேப்பல்.