டெஸ்ட் உலகக்கோப்பையில் வெற்றி பெற்றால் இவ்வளவு தொகையா? – WTC 21-23 பரிசு தொகையை அறிவித்த ICC.
ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி குவாலிபயர் ஒன்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. மேலும் இன்று இரவு குவாலிபையர் 2 நடக்க இருக்கிறது. இதில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கிறது.
ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி குவாலிபயர் ஒன்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. மேலும் இன்று இரவு குவாலிபையர் 2 நடக்க இருக்கிறது. இதில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி பைனல் சென்று வரும் 28ஆம் தேதி சென்னை அணியை எதிர்கொள்ளும்.
28 போட்டியோடு ஐபிஎல் முடிந்தாலும் அதற்கடுத்து டெஸ்ட் உலகக்கோப்பை வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. ஐபிஎல் போட்டியில் இருந்து ஏற்கனவே பல வீரர்கள் போட்டி முடிந்து வெளியேறிய நிலையில் அவர்களில் டெஸ்ட் உலககோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சமீபத்தில் தான் இங்கிலாந்து புறப்பட்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் 2023 டெஸ்ட் உலகக்கோப்பையில் வெற்றிபெறும் அணி பெரும் தொகையை ICC அறிவித்துள்ளது. அவர்கள் கூறியுள்ளபடி இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக $1.6 மில்லியன் கொடுக்கப்படுகிறது. அது இந்திய மதிப்பில் ரூபாய் 13.2 கோடியாகும். மேலும் தோல்வியுற்ற அணிக்கு இறுதிப் போட்டியாளக வந்ததினால் $800,000 கிட்டத்தட்ட இந்த மதிப்பில் 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும்.
Prize pot for the ICC World Test Championship 2021-23 cycle revealed 💰
— ICC (@ICC) May 26, 2023
Details 👇https://t.co/ZWN8jrF6LP
மேலும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21க்கான பரிசுத் தொகையை போல அதே மொத்தம் $3.8 மில்லியன் தான். கடந்த டெஸ்ட் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் $1.6 மில்லியன் பரிசு தொகையை பெற்றது.
Winner of the ICC World Test Championship (WTC) final between India and New Zealand will take home the prize money of USD 1.6 million along with the ICC Test Championship Mace: International Cricket Council pic.twitter.com/fVg4JL8jyn
— ANI (@ANI) June 14, 2021
மற்ற அணிகளுக்கான பரிசு :
மேலும் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 21-23 தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா $450,000 பெற்றது. நான்காவது இடத்தில் வந்த இங்கிலாந்து $350,000 பெற்றது. ஐந்தாவது இடத்தில் இருந்த இலங்கை அணிக்கு $200,000 தொகையும் வழக்கப்படுகிறது. மேலும் 6,7,8,8 இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கு தலா $100,000 வழங்கப்படுகிறது.