இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா போட்டியில் பந்து மாற்றப்பட்ட விவகாரம் – மவுனம் கலைந்த ஐசிசி

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டா

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 283 ரன்கள் அடித்த நிலையில் இரண்டவது இன்னிங்கில் 295 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா.

இதனை தொடர்ந்து இரண்டவது இன்னிங்கில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 395 ரன்களை விளாசியது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கை ஆடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கமே மிகவும் சிறப்பாக விளையாடியது. சொல்லபோனால் 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து திடீரென 37வது ஓவரில் உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட்டைல் பந்து படத்தினால் பந்து கொஞ்சம் சேதப்பட்டதாக அம்பயர்கள் பந்தை மாற்றினார்கள்.

இதனால் மீண்டும் புதிய பந்தன் சில மாற்றங்களுடன் மீண்டும் வழங்கப்பட்டது, இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏனென்றால் இதற்கு பிறகு மூன்று விக்கெட்டுகள் இங்கிலந்து அணிக்கு கிடைத்தது. இது இந்தப்போட்டியின் மிகப்பெரிய தருமணமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இதற்கு பிறகு முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததால்இங்கிலாந்து அணியால் வெற்றிபெற சுலபமாக இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து ரக்கி பாண்டிங் கூட இந்த விவகாரத்திற்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் தான் இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பதிலளித்துள்ளது ஐசிசி.

போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து ஐசிசி கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், ஒவ்வொரு போட்டியும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து பந்துகளும் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். மேலும் பந்து மாற்றப்படவேண்டும் என்ற சூழ்நிலை தேவைப்படும்போது ​​போட்டி அதிகாரிகள் பழைய பந்தின் நிலைக்கு அருகே உள்ள பந்தை தேர்வு செய்கிறார்கள்.

மாற்றுப் பந்தின் நிலையில் உள்ள கணிசமான வேறுபாடு மிகவும் முக்கியமான அம்சமாகும். அந்த இரண்டு பந்துகளையும் நீங்கள் பார்த்து மட்டுமே ஒப்பிட முடியாது. நீங்கள் பந்தை மாற்ற முடிவு செய்தால் மாற்றப்படும் பந்திற்கு முடிந்தவரை நெருக்கமாக இருக்கும் ஒரு பந்தை தேர்வு செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெட்டியில் பழைய நிலை உள்ள பந்துகள் அதிகம் இல்லை. மேலும் எடுக்கப்பட்டவை நடுவர்களால் ஆராயப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டன என்று ஐசிசி நிர்வாகிகள் சொன்னதாக தற்போது தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை