இந்தியாவின் டி20 தரவரிசையில் NO 1 ஆல்ரவுண்டர் ஆகினார் ஹர்திக் பாண்டியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்திய தரவரிசையை வெளியிட்டிருந்த்தது. இந்நிலையில் இன்று அதாவது ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் தற்போது அவரின் நம்பர் ஒன்

By ·

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்திய தரவரிசையை வெளியிட்டிருந்த்தது. இந்நிலையில் இன்று அதாவது ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் தற்போது அவரின் நம்பர் ஒன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் டி20 தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் நம்பர் ஒன் இடத்தை எட்டுவதற்கு மிகவும் குறைவான மதிப்பெண்களே தேவை படும். இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக இருப்பினும், டி20 போட்டிகளில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தான் இருக்கிறார்.

இப்படியொரு நிலையில் டி20 பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்க்கும் போது சூர்யகுமார் யாதவ் 906 ரேட்டிங்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 5 டி20 தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக பேட் செய்தால் பாகிஸ்தானின் இரு வீரர்களும் சூர்யாவை முந்தலாம்.

இதுமட்டுமல்லாது இந்திய அணி இன்னும் ஜூன் மாதம் வரை டி20 தொடரில் விளையாடவில்லை. சமீபத்திய தரவரிசையையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தவிர, எந்த பேட்ஸ்மேனும் முதல் 10 இடங்களுக்குள் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில், ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி 16வது இடத்தில் உள்ளார்.

இவர்களை தவிர்த்து பந்துவீச்சாளர்களைப் பற்றி பார்க்கும் போது முதல் 10 இடங்களில் எந்த இந்திய பந்து வீச்சாளரும் சேர்க்கப்படவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டி20 தரவரிசையில் 14வது இடத்தில் உள்ளார். என்பது குறிப்பிடதக்கது மேலும் தற்போது இந்தியாவில் டி20 ஐபிஎல் நடந்து வருவதினால் இந்த தரவரிசையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை