நெருங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப், வெளியான புதிய புரோமோ – வெற்றி யாருக்கும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தயாராகும் பொருட்டு இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் முன்னதாகவே அங்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்ற

By ·

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தயாராகும் பொருட்டு இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் முன்னதாகவே அங்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் புஜாரா மற்றொரு தொடரில் ஸ்மித்துடன் இணைத்து விளையாடி வந்த இந்நிலையில் அவர் தற்போது இந்திய அணியுடன் இனைந்துளார்.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. சவுதாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரரின் இருந்து போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் தலைமயில் 2வது டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் விளையாட இருக்கிறது.

ஆனால் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரிஷப் பண்ட், பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்றவர்கள் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கு பெற முடியாத்த நிலையில் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் அனைவருமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீரர்கள்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சுப்மன் கில், விராட்கோலி, புஜாரா, போன்றவர்களை பேட்டிங்கில் நம்பியுள்ளது. அதே போன்று பந்துவீச்சில் ஷமி, அஸ்வின், ஜடேஜா , உமேஷ் யாதவ் போன்றவர்களை நம்பியுள்ளது. அஸ்த்திரேயியவை பொறுத்தவரையில் பல அனுபவம் வாய்த்த வீரர்கள் இருக்கின்றனர். அதோடு ஸ்மித் சிறந்த பார்மில் தற்போது இருப்பதினால் இந்த போட்டி கண்டிப்பா இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டியின் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விடியோவானது 1 நிமிடத்திற்கு சென்றாலும் இந்திய அணியின் அனைவரும் இடம்பெற்றிருக்கின்றனர். மேலும் சினிமாட்டிக் மோடில் இந்த விடியோவானது உருவாக்கப்ட்டுள்ள இந்த விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை