CSKவில் இந்த இளம் வீரருக்கு திறமையை காட்ட வாய்பு கிடைக்கவில்லை – மறைமுகமாக கருத்து தெரிவித்த ஐஸ்லாந்து கிரிக்கெட்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.லக்னோ அணி இதற்க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடம் ஒரு தோல்வியை தழுவி இருந்தது. மற்று ஒரு பக்கம் சென்னை அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்று இந்த போட்டியில் மோதின.
இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வந்தது. ஆரம்பத்தில் லக்னோ அணியின் அதிகம் தான் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழித்து தடுமாற மற்று ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக விளையாடி அவரது அசரி சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் களமிறங்கிய தல தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன்களை மடமடவென ரன்களை சேர்த்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த லக்னோ அணி சென்னை அணியின் பந்துவீச்சை எளிதாக அடித்து 19 ஓவர்களில் விக்கெட்டுகள் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 82 ரன்களும் டி காக் 54 ரன்களையும் அடித்து இருந்தனர். இன்றைய போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது என்றும் சொல்லலாம். எனவே லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது
We'd bat this guy MS Dhoni a bit higher than 8 if he played for Iceland. He looks like a good young prospect and is not getting the chance to show his talent at CSK.
— Iceland Cricket (@icelandcricket) April 19, 2024
இந்நிலையில் இந்த போட்டியின் போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்லாந்து கிரிக்கெட் கூறுகையில் ; ஒருவேளை எம்.எஸ் தோனி என்ற அந்த வீரர் ஐயர்லாந்து அணியில் இருந்தால் அவர் 8வது இடத்தில் களமிறங்குவதை விடவும் கீழே களமிறங்க வைத்திருப்போம். அவர் ஒரு நல்ல இளம் கிரிக்கெட்டராக இருக்க வாய்ப்புள்ளவராகத் தெரிகிறார். மேலும் சிஎஸ்கேயில் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறவில்லை என்று நினைப்பதாக கூறியுள்ளது ஐஸ்லாந்து கிரிக்கெட் ட்விட்டர் பக்கம்.
எம் எஸ் தோனி காலத்திற்குள் நுழைந்து வருவதை பார்க்கும் பந்துவீச்சாளர்களுக்கு அவர் அழுத்தம் கொடுக்கிறார். அணிகள் மற்றும் எதிரணிகள் மற்றும் பந்துவீச்சாளர்கள் மீது அவர் கொண்டிருந்த இருப்பு மற்றும் மிரட்டல் அதுதான். எங்களிடம் ஒரு இளம் குழு உள்ளது, MS போன்ற ஒரு பெரிய நபரால் அவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை மற்றும் கூட்டம் மிகவும் சத்தமாக இருந்தது.
நாங்கள் எங்களுடைய திட்டத்தில் சரியாக இருந்தோம், திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முயற்சி செய்தோம். மறுபுறம் தோனி சிக்ஸர்களை அடிப்பதில் ஒரு அற்புதமான வீரர் என்றார் கேஎல் ராகுல். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் எம்எஸ் தோனி தனது அற்புதமான பேட்டிங்கினால் 9 பந்துகளில் 3 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.