நான் மட்டும் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய சின்ன தல சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் வரலாற்றில் நேற்று நடந்த போட்டியில் 13 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனை படைத்து ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிங்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சரித்திரத்தில் இடம் பிடித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த வருடம் சில போட்டிகளில் விளையாடிய நிலையில் இந்த வருடம் தொடக்க வீரராக கள

By ·

ஐபிஎல் வரலாற்றில் நேற்று நடந்த போட்டியில் 13 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனை படைத்து ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிங்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சரித்திரத்தில் இடம் பிடித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த வருடம் சில போட்டிகளில் விளையாடிய நிலையில் இந்த வருடம் தொடக்க வீரராக களமிறங்கி ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக இவர் விளையாடிய கண்டிப்பாக பல ஆண்டுகள் பேசப்படும் என்பதில் சந்தேகமே கிடையாது. யஷ்ஸ்வி பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறிவரும் நிலையில் தான் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது பின்வருமாறு

நான் ஒருவேளை இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால், அவரை இன்றே நான் உலகக் கோப்பைக்கு ஒப்பந்தம் செய்திருப்பேன், அவர் தற்போது தெளிவான பேட்ஸ்மேன்னாக இருக்கிறார். என்று ரெய்னா கூறினார். மேலும் பேசிய அவர் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனக்கு முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கை நினைவுபடுத்துகிறார் என்றும் ரெய்னா கூறினார்.

ரோஹித் ஷர்மா இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை தான் அவர் உலகக் கோப்பைக்கு தேடுகிறார் என்றுரெய்னா மேலும் கூறினார். ரெய்னா மட்டுமல்ல, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயும் 21 யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

அவர் போட்டிருந்த ட்விட்டர் பதிவில் இப்போதே அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரட் லீயும் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதிரடி மன்னன் சேவாக் இவர் ஷாட்டுகளை மிகவும் தெளிவாக அடிக்கிறார். இது மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒருவர் என்று பதிவிட்டிருந்தார். மேலும் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்களும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி சொல்லவேண்டும் என்ற அவர் சாதரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பகுதிநேர பானிபூரி கடையில் வேலை பாதி நேரம் ஆசாத் மையத்தில் கிரிக்கெட் பயிற்சி என இருந்த வந்த இவரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார். அதற்கு பிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருக்கிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைனர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை