பங்களாதேஷ்க்கு எதிராக கோலி சதம் அடித்தால் கோப்பை நமக்கு தானா? இது தான் வரலாற்று. வரலாறு மீண்டும் நிகழுமா ?
பங்களாதேஷ் அணிக்கு எதிராக கோலி சதம் அடித்தால் வரலாறு மீண்டும் நிகழ்ந்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிக
பங்களாதேஷ் அணிக்கு எதிராக கோலி சதம் அடித்தால் வரலாறு மீண்டும் நிகழ்ந்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.
இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 103 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர். விராட் கோலி சிக்சரின் மூலம் இந்திய அணி வெற்றியை கண்டது.
மீண்டும் நிகழும் வரலாறு:
விராட் கோலி இதே போல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிராக கோலி சதம் அடித்தார். அந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.அதே போல் நேற்று நடத்த போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த முறையும் அதே போல் இந்திய இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்றும் பலர் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் இது வரை ஒரு தோல்வி கூட தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.