இந்திய அணி நிர்வாகம் எங்களிடம் இதை கேட்டுகொண்டால் நாங்கள் எங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் – கே.எஸ்.பரத்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன

By ·

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆலி போப் சிறப்பான இன்னிங்ஸில் 196 ரன்களுடன் இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து இருந்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அவரது அந்த சிறப்பான பேட்டிங் தான். இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்சில் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹார்ட்லி 7/62 எடுத்ததால் இந்திய அணியால் அந்த இலக்கை துரத்த முடியாமல் போனது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் சங்கடமான தோல்வியைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸின் போது பல நிபுணர்கள் அவரது கருத்துகளை கூறி வருகின்றனர்.

நாளை தொடங்க உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளனர் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் யாரு விளையாட வைப்பது என்று கேள்வி தற்பொழுது இருந்து வந்துள்ளது. வாஷிங்டன் சுந்தரவையும் சர்ப்ராஸ் கானையும் இந்திய அணி டெஸ்ட் அணிக்கு அழைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு பிளேயிங் 11-ல் வாய்ப்பு அளிக்குமா என்பதுதான் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஏற்கனவே விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய நிலையில் அவர்களும் அணியிலிருந்து வெளியேறியது இந்திய இந்திய அணிக்கு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளது. இது குறித்த இந்தியா டெஸ்ட் அணியும் கீப்பர் கே எஸ் பரத் கூறுகையில் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு ஒரு அணுகுமுறை எப்போதும் இருந்து வருகிறது. நாங்கள் பந்துவீச்சாளர்களை யார் என்று பார்த்தது விளையாட மாட்டோம்.

பந்து எப்படி வருகிறது என்பதை மட்டும் தான் நாங்கள் பார்த்து விளையாடுவோம் பொதுவாக இந்த அணுகுமுறை அனுபவம் இன்மை என்று எதுவும் கிடையாது. தற்போது மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கின்றது என்பதை நான் பார்க்கவில்லை. மைதானத்தின் ஆடுகளம் எவ்வாறு இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல நாங்கள் விளையாடுவோம்.

பேட்டர்களாக நாங்கள் சில சாட்டுகளை அடித்து விளையாடியிருந்த முதல் போட்டியில் கூட அதுபோன்ற ஷார்ட்டுகளை நாங்கள் அடுத்து இருந்தோம். குறிப்பிட்ட சாட்டுகளை குறிப்பிட்ட வழியில் விளையாட எங்களிடம் அணி நிர்வாகம் கேட்டால் நாங்கள் அதைக் கேட்டார் போல் ஏற்று விளையாடுவோம். அதற்கான திட்டங்களை திட்டங்களையும் நாங்கள் வகுத்து உள்ளோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை