ஆடுகளத்தை மாற்றி இருந்தால் முடிவுகளும் மாறி இருக்கும் – ஹர்பஜன் சிங்.

நேற்று முன்தினம் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை எளிதாக வெற்றிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை அதா

By ·

நேற்று முன்தினம் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை எளிதாக வெற்றிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை அதாவது 6 முறை கோப்பையை பெற்றது. இந்திய அணி நடைபெற்ற லீக் போட்டிகள் அனைத்திலும் மற்றும் அரையிறுதி சுற்றிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்த இறுதி போட்டி மோதிக் கொண்டது.

ஆனால் இந்திய அணிக்கு துர்தவஷ்டமாக இறுதிப் போட்டி இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. அந்தப் போட்டியில் டாஸ் ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. ஆனால் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணியின் மிக எளிதாக அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் 43 ஒவர்களின் 241 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணி விளையாடிய மைதானத்தின் ஆடுகளம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இது கூறித்து பேசிய ஹர்பஜன் கூறுகையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நீங்கள் விளையாடிய ஆடுகளம் மிகவும் மெதுவான ஆடுகளம் இந்த வழக்கமான ஆடுகளத்தை விட மிகவும் வறண்டு காணப்பட்டது. ஆதனால் இறுதி போட்டிக்கு 300 ரன்களுக்கு மேல் அடிகின்ற ஆடுகளம் தான் சரியாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட வறண்டு ஆடுகளம் அது எதிரணிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் எங்களுடைய வீரர்கள் எவ்வளவு சிறப்பான வீரர்களாக இருந்தாலும் இது போன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது இதுபோன்றுதான் நடக்கும். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் பேட்டிங் செய்தும் சாதகமான ஆடுகளத்தை அமைந்திருந்தால் இந்த போட்டியில் முடிவு மாறி இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன் பின்பு இந்திய அணி நாளை மறுநாள் அதாவது நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை t20 போட்டியில் மோத உள்ளது. இதில் மீண்டும் சஞ்சு சம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவர் இந்திய அணியில் இன்னும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் அதாவது சூர்யா குமார் யாதவ் தவிர அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட உள்ளார்கள். சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங் ஜிதேஷ் ஷர்மா, ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் என இந்திய அணி அறிவித்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை