“நான் ஒன்றும் குருடன் கிடையாது. அவர் மீண்டும் வருவார்” அலஸ்டர் குக்குக்கு பதிலடி கொடுத்த பயிற்சியாளர் மெக்கலம்.

நான் ஒன்றும் குருடன் கிடையாது. அலஸ்டர் குக்குக்கு பதிலடி கொடுத்து இருந்தார். இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்

By ·

நான் ஒன்றும் குருடன் கிடையாது. அலஸ்டர் குக்குக்கு பதிலடி கொடுத்து இருந்தார். இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்த்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

அதில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருந்தது ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் ஒரு காரணம் தான். அது மட்டுமல்லாமல் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது சர்ப்ராஸ் கானின் இரண்டு அரை சதமும் தான். சர்ப்ராஸ் கான்னுக்கு இது தான் இந்திய அணிக்கு அறிமுகப்போட்டி. அவர் பல காலமாக இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று அவர் போராடி கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

ஒரு பக்கம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் மற்று ஒரு பக்கம் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தார்கள். ஜானி பேர்ஸ்டோவின் ஆட்டம் சுமாராக இருப்பதாவும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். ஜானி பேர்ஸ்டோ இந்திய அணிக்கு எதிரான இது வரை நடந்த 3 போட்டிகளிலும் 102 ரன்களை மட்டுமே அவர் அடித்து இருந்தார்.

அவரது Average 26 மட்டுமே உள்ளது. எனவே முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் கூறுகையில் ஜானி பேர்ஸ்டோவிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் லாரன்ஸை அணியில் எடுக்க வேண்டும் என்று அவர் கருத்தை அவர் தெரிவித்து இருந்தார். இதற்க்கு பதிலடி தரும் வகையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கலம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். நான் பார்வையற்றவன் அல்ல, ஆனால் அவர் எங்களுக்காக நன்றாகச் செய்திருக்கிறார். உயர்தர ஜானி பேர்ஸ்டோ எந்த நிலையிலும் எவரையும் போலவே சிறந்தவர் என்பதை நாங்கள் அறிவோம்,

எனவே அவருக்கு நம்பிக்கையை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் மற்றும் வெளியில் இருந்து அவரை பற்றி வரும் சத்தத்தைத் தடுக்க வேண்டும்.எங்கள் பார்வையில், அவருக்கு நம்பிக்கையைத் தருவதுடன், வெளியே அவரை பற்றி சத்தத்தையும் தடுக்க வேண்டும், மேலும் அவரை உண்மையாகவே வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஜானி வருவார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.”

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை