குழந்தை போல விளையாடுனாங்க.. கொதித்தெழுந்த தென்னாபிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா அணியும் தென் ஆப்பிரிக்கா
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்பதினால் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்யதொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாத காரனத்தால் தென்னாபிரிக்கா அணியானது 49.4 அவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து து 212 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனை சுலபமான சேசிங் செய்த ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் இந்த மோசமான தோல்விக்கு பலரும் விமர்சனங்களை கூறிவரும் நிலையில் தான் முன்னாள் தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாகீர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “அவர்கள் குழந்தைகளைப் போல கிரிக்கெட் விளையாடினர். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் தொடக்கமாக இருந்தது. அவர்கள் எடுக்காத பொறுப்பை பேட்டர்கள் எடுத்திருக்க வேண்டும். பந்து ஸ்விங் மற்றும் சீமிங் என்றால், நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்.
குயின்டன் டி காக்கும், பவுமாவும் நீண்ட நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும். போட்டிக்கு முன்பு பவுமாவே உடல் தகுதி இல்லை என்று கூறினார். இது தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக இருக்க முடியாது, ஏனெனில் நீங்கள் ஒரு தகுதியான வீரராக விளையாட வேண்டும்.”
பின்னர் பேட்டர்களின் ஷாட் தேர்வுகளில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆம், ஆஸ்திரேலியா முன்பு வென்றது மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் என்பது அவர்களின் மனதில் இருந்திருக்கலாம், ஆனால் முழு உலகக் கோப்பையிலும் நீங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் பிராண்டைக் காட்டுங்கள்.
நீங்கள் முன்பு செய்ததால் நிலைமையை மாற்றிக் காட்டுங்கள். இந்தியா அதைச் செய்தது. முதலில் சிறப்பாக விளையாடிவிட்டு பின்னர் மோசமாக பேட்டிங் செய்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாகீர்.