இதை நாங்கள் செய்திருக்க வேண்டும். யாருக்கும் இது கடினம் தான் – பாட் கம்மின்ஸ் பேட்டி.
இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்
இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக சுப்மன் கில் உடல்நிலை காரணமாக 2023உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடும் முதல் போட்டியான இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் கலந்துகொள்ள வில்லை, இதனால் இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி பின்னர் ஒரு நிலைக்கு வந்தாலும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் தடுப்பு சுவராக மரியா கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 41.2 ஓவர்களிலேயே வென்றது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்ம்மிங்ஸ் கூறுகையில் “நாங்கள் குறைந்தது 50 ரன்களாவது அதிகமாக அடித்திருக்க வேண்டும்.
இந்த போட்டியில் 200 ரன்களுக்கு கீழ் எதிரணியை சுருட்டுவது என்பது எளிதானது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக இருந்தது. எங்களது அணியிலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்ததை நினைத்து நான் வருத்தம் அடையவில்லை. ஆனாலும் ரன்கள் குறைவாக இருந்ததே இந்த போட்டியில் எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மிட்சல் மார்ஷ் கேட்சை விட்டது பற்றி நான் யோசிக்கவில்லை.
ஒருவேளை 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் விழுந்து இருந்தால் போட்டியே கனவு துவக்கமாக அமைந்திருக்கும். ஹேசல்வுட் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரது பவுலிங் என்று மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இது 9 போட்டியில் ஒரு தோல்வி மட்டும்தான். எனவே இதிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.