நாளை நடக்கும் போட்டியில் யாருக்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம்? புள்ளி விபரம் சொல்வது என்ன

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்

By ·

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.

இந்நிலையில் நாளை மதியம் 2.00 மணிக்கு சேப்பாக்கம் மைத்தானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியானது நடைபெற இருக்கிறது. பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு அதிகமாக கை கொடுக்கக்கூடிய மைதானம் என்று பலரும் கூறுவார்கள். அதேபோன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களும் சுழற்பந்து வீச்சினை எதிர்த்து விளையாடுவதில் சற்று சிரமத்தை சந்தித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இதனால் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கலாம், குறிப்பாக இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவையும் களமிறக்கலாம். மேலும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா உள்ளதால் பும்ரா, சிராஜுடன் அவர் இணைந்து வேகப்பந்து வீச்சு துறையை கவனித்துக் கொள்வார். 

எனவே இந்திய அணி இந்த திட்டத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக நம்பலாம். மேலும் சென்னை மைத்தனத்தை பொறுத்தவரையில் சென்னை மைதானம் அமைக்கப்பட்டு மொத்தம் அதில் 13 உலக கோப்பை போட்டிகள் இங்கே நடந்துள்ளது இதில் இந்தியா 7 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 2 போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை இந்தியா பதிவு செய்துள்ளது. எனவே இந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக இருக்கும் மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஸ்மித் மற்றும் வார்னருக்கு எதிராக நல்ல ஒரு எக்கனாமிக் ரேட்டை வித்திருப்பதினால் அது இந்திய அணிக்கு மேலும் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாளை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத வாய்ப்பிருக்கும் வீரர்கள் “(கேப்டன்) ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை